இந்தியத் திட்ட நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
இந்தியா ஒரு பெரிய நாடு. எனவே ஒரே மாதிரியான நேரம் தேவைப்படுகிறது. இல்லையெனில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நேரம் இருக்கும். இதனால் அதிகப்படியான குழப்பங்கள் ஏற்படும். இந்த குழப்பத்தைத் தீர்க்க அலகாபாத் வழியாகச் செல்லும் தீர்க்க கோடு (82.30 டிகிரி) இந்தியத் திட்ட நேரத்தைக் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
முதலில் GMT( GREENWICH MEEN
TIME) பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
வலது பக்கத்திலுள்ள போட்டோவானது 'Meridian Line' ல் எடுக்கப்பட்டது ( Thanks : "National
Maritime Museum') இங்கிலாந்திலுள்ள கிரீன்விச் என்ற இடத்தை GMT யாகக் கணக்கிட 1884 ல் INTERNATIONAL MERIDIAN CONFERENCE ல் தீர்மானிக்கப்பட்டது. MERIDAIAN (LATIN
WORD : MERI - MIDDLE, DIEM - DAY) என்பது ஒரு கற்பனைக் கோடு. தீர்க்ககோட்டினை (LONGITUDE) PRIME
MERIDIAN ( '0' டிகிரி LONGITUDE) எனவும் அழைக்கலாம். எனவேதான் முற்பகலை AM (ANTE
MERIDIAN) எனவும் , பிற்பகலை PM (POST MERIDIAN) எனவும் அழைக்கப்படுகிறது. வடதுருவத்திலிருந்து தென்துருவம் நோக்கிச் செல்லும். '0' டிகிரி தீர்க்க கோடு கிரீன்விச்சிலுள்ள 'OLD
ROYAL ASTRONOMICAL OBSERVATORY' வழியாகச் செல்கிறது. எனவே இது உலகநேரமாகக் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படுகிறது. கிரீன்விச்சில் 'TRANSIT CIRCLE' என்ற தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைத்தவர் 'Sir George Biddell Airy" ஆவார்.
கிடைமட்டமாகச் செல்லும் கோடுகள் அட்சக்கோடுகள் எனவும், செங்குத்தாகச் செல்லும் கோடுகள் தீர்க்க கோடுகள் எனவும் அழைக்கப்படும். தீர்க்க கோடுகள் மொத்தம் 360 உள்ளன. ஒரு தீர்க்ககோட்டிற்கும் மற்றொரு தீர்க்ககோட்டிற்கும் இடையே உள்ள நேர வித்தியாசம் 4 நிமிடங்கள்.(360 * 4 =1440) ஒரு மணி நேரத்திற்கு 60 நிமிடங்கள் (1440/60 = 24 Hrs).
இந்தியாவில் WESTERNMOST
POINT குஜராத் (68 டிகிரியில் அமைந்துள்ளது),
EASTERNMOST POINT அருணாச்சலப் பிரதேசம் ( 97 டிகிரியில் அமைந்துள்ளது). இரண்டுக்கும் இடைப்பட்ட இடம் (68 + 97=165 / 2 =82.5) உத்திரப்பிரதேசத்திலுள்ள அலகாபாத் ஆகும்.
இது 82.5 டிகிரி தீர்க்ககோட்டில் அமைந்துள்ளது. ஒவ்வொரு தீர்க்ககோட்டிற்குமுள்ள நேர வித்தியாசம் 4 நிமிடங்கள். எனவே 82.5 * 4 = 330/60= 5.5 மணி நேரம் இந்தியத் திட்ட நேரமாகக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியாவானது கிரீன்விச் நேரத்தில் 5.5 மணி நேரம் கூடுதல் வித்தியாசமுள்ளதால் இதனுடன் '+' சேர்க்கப்படுகின்றது. எனவே இந்தியத்திட்ட நேரம் +5.30 ஆகும்.
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.