முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Tuesday, December 18, 2018

சீர்காழி சீமையின் அரசர் -.வடகால் பாளையகாரர்கள்

                    சீர்காழி சீமையின் அரசர் .

                 இவர் பெயர் “நீலகட்க த்வஜ ஸ்ரீ கரங்கரான அக்னி குதிரையேறி அநேக வரிசை பெற்ற மஹா ராஜ ராஜ ஸ்ரீமான் நடராஜ ராயராவுத்த மிண்ட நயினார் ” (காலம் : 19 – 20 ஆம் நூற்றாண்டு )
              வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான வடகால் பாளையக்காரர்கள் சீர்காழி சீமையை ஆட்சி செய்துள்ளனர். இவ்வரசர்கள் தங்களை “நீலகட்க த்வஜ ஸ்ரீ கரங்கரான அக்னி குதிரையேறி அநேக வரிசை பெற்ற ராயராவுத்த மிண்ட நயினார்” என்று தஞ்சை மராத்தியர் செப்பேட்டில் குறித்துள்ளனர் .
                  மஹா ராஜ ராஜ ஸ்ரீ அழகிய சிதம்பர ராயராவுத்த மிண்ட நயினார் கிபி 17௦1 இல் நிலக்கொடை அளித்ததை பற்றி செப்பேடு தெரிவிக்கின்றது . “ராயராவுத்த மிண்டனாருளா ” பாடிய புலவருக்கு அரசன் பன்னீராயிரம் பொன் பரிசளித்தான் என்று “திருக்கை வளம் ” குறிப்பிடுகிறது .
மஹா ராஜ ராஜ ஸ்ரீமான் நடராஜ ராவுத்த மிண்ட நயினார் கிபி 1919 ஏப்ரல் 19,௨௦ தேதிகளில் திருக்கழுக்குன்றத்தில் கூடிய சென்னை வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்க 3௦-வது ஆண்டு விழாவிற்கு தலைமை வகித்தார் .
                   வடகால் அரசர்களை பற்றி தருமபுரம் ஆதீன செப்பேடுகள் குறிப்பிடுகின்றன .ஸ்ரீமத் செல்வம் ராயுத்த மிண்ட நயினார் தங்களிடம் இருந்த செப்பு பட்டயங்களை தஞ்சை தமிழ் பல்கலைகழகத்துக்கு கொடையளித்தார் . வடகால் அரசர்கள் பல கோவில்களுக்கு தானம் அளித்தும் சிறப்புற நிர்வகித்தும் வருகின்றனர் .
                   வடகால் அரசர்கள் பெயரான ராவுத்தமிண்டன் என்பது முற்காலத்தில் இராகுத்த மிண்டன் என்றே வழங்க பட்டிருக்கிறது . கிபி 14 – 16 ஆம் நூற்றாண்டு வரை விளந்தையை (ஆண்டிமடம் ) ஆட்சி செய்த வன்னிய குல க்ஷத்ரியர்களான “விளந்தை கச்சிராயர்கள் ” தங்கள் பெயருக்கு முன் இராகுத்த மிண்டன் என்று குறிப்பிட்டுள்ளனர் .
“இராகுத்த மிண்டன் அரச மார்த்தாண்டன் வெட்டுங்கை அழகிய கச்சிராயர் ”, “இளவரசர் மணவாளன் இராகுத்த மிண்டன் ஏகாம்பரநாத கச்சிராயர் ”, “இராய இராகுத்த மிண்ட மல்லிகார்சுன கச்சிராயர் ” போன்றோர் குறிககபடுகின்றனர் .
             
விளந்தை கச்சிராய அரசர்கள் “இராகுத்த மிண்டன் ” சந்ததிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல கோவில்களுக்கு கொடை வழங்கியுள்ளனர் .

இன்றும் வடகால் முருகன் கோயில் அருகில் அரண்மனைத்தெருவில் உள்ளனர்.
மாதானம் கோயில் இவர்களுடையதுதான்.
இவர்கள் பற்றிய பட்டயங்கள் நிரய கான கிடைக்கிறது.அவர்களிடம்
தருமை ஆதீன மடத்தில்
வைத்தீஸ்வரன்கோயிலில்
தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில்

இவர்கள் பற்றிய வரலாறு கி.பி1200 முதல் கான கிடைக்கிறது

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.