முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Saturday, December 8, 2018

பெயர் சொல்லும் திருத்தலங்கள்.

பெயர் சொல்லும் திருத்தலங்கள். 

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடாகும்.
இங்கு 24,608 சிவன் கோயில்கள் உள்ளன
இவற்றில் சமய குரவர்களால் பாடல் பெற்ற தலங்கள் 247. திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் 106.
பெருமாளுக்கு 10,033 கோவில்கள் உள்ளன.
மேலும் 10,346 ஏனைய கோவில்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றித் தேவாரப் பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.

நெற்றிக்கண் காணப்படல்.
கழுத்து நிலநிறமாக காணப்படல்.
சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
நீண்ட சுருண்ட சடாமுடி
தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
புலித்தோலினை ஆடையாக அணித்திருத்தல்.
கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்
சைவசமயத்தவர்களது முழுமுதற் கடவுள் சிவனாகும். சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா ,இலங்கை, நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு.

பஞ்சபூத சிவத்தலங்கள்.
உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)

1.மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர்.
2.நீர் (அப்புத்தலம்) -திருவானைக்கா திருச்சிராப்பள்ளி
3.தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை
4.வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி
5.வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்

ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்.
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம்.அந்த ஐம்பெரும் மன்றங்கள் அமைந்துள்ள சிவாலயங்கள்(அடைப்புக் குறிக்குள் சபைகள்)

1.தில்லை(சிதம்பரம்)-பொன் மன்றம் (கனக சபை).
2.திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை).
3.மதுரை-வெள்ளி மன்றம் (இராஜ சபை).
4.திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).
5.திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).

மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு. அப்பகுதியிலேயே முதன்முதலில் சிவவழிபாடு நடைபெற்றிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.

சைவசமயம் மிகத் தொன்மை வாய்ந்த்து ஹரப்பா, மொகஞ்சதாரோ என்னும் இடங்களில் அகழ்வு ஆராய்ச்சிகள் நிகழ்த்திய சர்ஜான் மார்ஷல் போன்ற பேரறிஞர்கள் சைவசமயமானது உலகத்திலேயே மிகவும் பழைமையான உயிர்ப்பாற்றல் மிக்க சமயமாக இருந்து வருகின்றது என்று ஆராய்ந்து கூறியுள்ளனர்.

வட அமெரிக்காவில் கொலரடோ என்னும் இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது ஒரு சிவன் கோயிலும் அதில் ஒரு சிவன்கோயிலும் அதில் ஒரு பெரும் சிவலிங்கமுக் 1937 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கோயில் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் நிருபித்துள்ளனர்.

ஜாவாத்தீவில் பல சிவன் கோயில்கள் அழிவுற்ற நிலையில் உள்ளன. இங்குள்ள டெகால் என்ற ஆற்றிலிருந்து. சிவபெருமானின் செப்புச்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

ஜாவாத்தீவில் உள்ள கோயில்களில் இன்றும் திருவாசகம் ஓதப்படுகிறது. அங்கிருப்பவர்க்குத் தமிழ்மொழி தெரியாதபடியால் ஏதோ மந்திரம் போல் உச்சரித்து வருகிறார்கள். மேலும் ஜாவாவில் உள்ள பெரம்பாணம் என்ற இடத்தில் உள்ள சிவன்கோயில் சிவதாண்டவத்தின் 32 முத்திரைகளைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன.

சுமத்திராவில் அழிபாடுற்ற சிவன் கோயில் உள்ளது. இங்கே அர்த்தநாரி வடிவம், கணபதி சிலை, நந்திசிலை உள்ளன.
போர்னியாவில் ஒரு மலைக்குகையில் சிவன், விநாயகர் சிலை உள்ளன.
சியாம் நாட்டிலும் கம்போடியாலும் சிவலிங்கத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. சியாமில் பழைய சிவன் கோயில் இருக்கிறது. இக்கோயில் உள்ள இடத்தில் இப்போதும் பொங்கல் விழா கொண்டாடப் படுகிறது.

பாபிலோனியாவில் நிகழ்ந்த அகழ்வராய்ச்சியில் 6000 ஆண்டுகட்கு முற்பட்ட சிவாலயங்களும் சிவாலயத்தின் வழிபாடுகளும் கிடைத்துள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட களிமண் ஏட்டில் சிவன் என்ற பெயர் காணப்படுகிறது.

பாபிலோனியர் தம் கடவுளுக்கு இட்டு வழங்கும் பெயர்களில் எல்சடை என்று ஒரு பெயர் காணப்படுகிறது. இச்சொல் சூரியனைப் போன்ற சிவந்த சடையுடையவன் என்று பொருள் தருவதாக இருக்கிறது. இங்கே கிடைத்த சிவபெருமானின் சிலை காளையின் மீது நிற்பதாகவும் கையில் மழுவும், இருபுறமும் முத்தலையுடைய சூலமும் ஏந்தியதாகவும் காட்சியளிக்கிறது. பாபிலோனியரின் "மாதப் பெயர்களில் ஒன்று சிவன்" பெயர் கொண்டிருக்கிறது.

சிரியா நாட்டில் சிவன் சிலையும் சிவன் உருவமும் பொறித்த வெண்கலத் தட்டும் கிடைத்துள்ளன. இத்தட்டில் உள்ள உருவம் தந்தைக் கடவுளின் வடிவம் என்று கூறுகின்றனர். இவ்வுருவம் வலக்கையில் மழுவும் இடக்கையில் ஆறு முனையுள்ள இடியேறுந் தாங்கி இடபத்தின் மேல் நிற்பதாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது.

எகிப்தில் உள்ள "பாலைவனம் ஒன்றுக்கு சிவன்" என்று பெயர் வழங்கி வருகிறது. இங்கு வாழும் மக்கள் அமன்யூ என்ற கடவுளை வணங்குகின்றனர். அக்கடவுளுக்கு இடபம் வாகனமாக இருக்கிறது.

கிரேக்க நாட்டில் சிவலிங்கங்களை பொது இடங்களில் எண்ணெயில் நீராட்டி வழிபட்டதாக எழுதி வைத்துள்ளனர்.

பெளத்த மதத்தில் ஒரு பிரிவான ஷிண்டோயிசம் என்பதில் சிவலிங்கத் திருவுத்திற்குப் பெருமதிப்புத் தரப் பெற்று வருகின்றது.

இவை அணைத்திற்கும் மேல் வடக்கே இமயமலைக்கு அருகேயுள்ள அமர்நாத் என்னும் புனிதத் தலத்தில் இயற்கையாகவே பனிக்கட்டியினால் ஆன சிவலிங்கத் திருவுருவம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உருவாகிக் கரைந்து வருகின்றது.

மேற்கூறப்பட்ட சான்றுகளினால் உலகின் பல்வேறு இடங்களிலும் சிவன் கோயில்களும் சிவவழிபாடும், சிவனின் பல்வேறு நிலையில் அமைந்த உருவங்களும் விழாக்களும் நடந்து வந்தன என்பதனை அறிகின்றோம். சிவலிங்கத்தைப் பிரதானமாக வைத்து, ஏனைய சிவமூர்த்தங்களை திருக்கோயில்களில் விளங்கும் கோபுரங்கள், விமானங்கள், கோஷ்டங்கள் ஆகிய இடங்களில் கற்சிலாவாகவும், சுதை வடிவாகவும், உற்சவமூர்த்திகளாகவும் பின்னாளில் நமது முன்னோர்கள் அமைத்து வழிபடலாயினர்.

சிவ வழிபாடு ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளியில் கண்டெடுக்கபட்ட சிவலிங்க வடிவங்கள் இதற்குச் சான்றாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவர். தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன் படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துக்கள் காணப்படுகின்றன.

இவ்வாறு சிவ வழிபாட்டுக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி.ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.