முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Thursday, December 20, 2018

திருவண்ணாமலை,ஊர் பெருமைகள்

ஊர் பெருமைகள்

 திருவண்ணாமலை,
திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில்
ஒன்று. அக்னி தலமாகும்.
தென்னிந்தியாவில ் புகழ்பெற்ற
திருவண்ணாமலையார ் கோவில்
அமைந்த ஊராகும். இறைவனின்
பெயரே ஊர் பெயராக
மாறியது .திருவண்ணாமலை சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.


கோவில் பிரதானம். இவ்வூர்
பொருளாதரத்திற்க ு கோவிலையும்
ஊரையும் பிரிக்க முடியாது.
சோழர்களால் கட்டப்பட்ட கோவில்
கிருஷ்ணதேவ ராயரால்
விரிவுபடுத்தப்ப ட்டது.
சிவனின் பஞ்சபூத தலங்களில்,
திருவண்ணாமலை அக்னி தலமாகும்.
திருவண்ணாமலையில ் வருடம்
முழுவதும் திருவிழாக்கள்
நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர
ஓரு வருடத்தில்
நான்கு முறை கொண்டாடப்படும்
பிரம்மோற்சவங்கள ில், தமிழ்
மாதமாம் கார்த்திகை-யில்
கொண்டாடப்படும்
பிரம்மோற்சவமே மிக
சிறப்பானாதாகும் .
இத்திருவிழா, பத்து நாட்கள்
கொண்டாடப்படுகிற து. இதில்
பத்தாம் நாள்
திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும்.
இந்த பத்தாம் நாளன்று,
காலை கோவிலில் பரணி தீபம்
ஏற்றப்படும். பின்னர்
மாலை அண்ணாமலை என அழைக்கப்படும்
மலையின் உச்சியில் நெய்யினால் தீபம்
ஏற்றப்படும். இந்த
தீபமானது தொடர்ந்த்து 11 நாட்கள்
எரியக்கூடியது.
இத்திருவிழா மட்டுமின்றி,
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள்
அண்ணாமலையை வலம் வருவார்கள்.
இது கிரிவலம் என
அழைக்கப்படுகிறத ு. இம்மலையின்
சுற்றளவு 14 கிமீ அகும்.
இத்தூரத்தை மக்கள், காலில்
செருப்பு அணியாமல்
சுற்றி வருவர்.
இங்கு பல சித்தர்கள
வாழ்ந்துள்ளனர். வாழ்கின்றனர். இரமண
மகரிஷி இறக்கும்
வரை திருவண்ணாமலையில ்
வாழ்ந்தார்.இங்க ு வெளிநாட்டவர்கள்
தங்கி இறை சேவையில்
ஈடுபடுகின்றனர். பீடி,திப்பெட்டி
தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பைத்
தருகின்றன. வெங்காயம்
இங்கு நன்றாக விளைகின்றது.
வெங்காய பக்கோடா இங்கு சுவையாக
தயாரிக்கப்படுகி றது .வெங்காய
பக்கோடா இந்த ஊரின் சிறப்பு

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.