முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Wednesday, December 26, 2018

தமிழிசை மூவர்


            தமிழிசை மூவர்

    

 தமிழிசை மூவர் அல்லது தமிழிசை மும்மூர்த்திகள் அல்லது ஆதி மும்மூர்த்திகள் என்போர் தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடித் தமிழிசையை வளர்த்த, அருணாசலக் கவிராயர்,முத்துத் தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப்பிள்ளை எனும் மூன்று பெருமக்கள் ஆவார். பொதுவாக கருநாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அறியப்படும் தியாகராசர்சியாமா சாஸ்திரிகள்முத்துச்சாமி தீட்சிதர்ஆகியோரை விட, இவர்கள் காலத்தால் முற்பட்டவர்கள்.
தமிழிசை மூவரே கிருதி என்று அழைக்கப்படும் கீர்த்தனைகளுக்கு வடிவம் கொடுத்தோர். இன்று உள்ள பல்லவி, அனுபல்லவி, சரணம் அல்லது எடுப்பு, தொடுப்பு, முடிப்பு எனும் அமைப்பு இவர்களின் பாடல்களிலேயே காணக்கிடைக்கிறது
தமிழிசை மூவருக்குத் தமிழக அரசு சார்பில் சீர்காழியில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது
இந்திய சங்கீதத்தில் நமக்குக் கிடைத்துள்ள இராகதாள அமைப்புடன்கூடிய இசைவடிவங்களுள் மிகப் பழமையான இசைவடிவங்கள் தேவார பதிகங்களாகும். தேவார முதலிகள் காலத்தின் பின் 16, 17, 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழிசை மூவர் என அழைக்கப்படும் சீர்காழிமூவர் முத்துத்தாண்டவர் மாரிமுத்துப்பிள்ளைஅருணாசலக கவிராயர் ஆகியோராவர். இவர்கள் மூவரும் தமிழிசைக்கு வித்திட்டவர்கள். இவர்களின் கீர்த்தனைகளே பிற்காலத்தில் தமிழிசைப் புலவர்கள் பலர் தோன்றி தமிழிசையை வளர்ப்பதற்கு முன்னோடியாக அமைந்தன என்று கூறினால் மிகையாகாது.
கர்நாடக சங்கீதத்தில் மும்மூர்த்திகள் எனப்போற்றப்படும் தியாகராஜசுவாமிகள் சியாமாசாஸ்திரிகள்முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகிய மூவரும் தமிழிசை மூவர் காலத்தால் பெரிதும் பிற்பட்டவர்களாவர். தமிழிசை மூவரின் செல்வாக்கு பிற்காலத்தில் தமிழிசைப் புலவர்கள் பலர் தோன்றக் காரணமாய் அமைந்தது.
முத்துத்தாண்டவர் (1560 – 1640) 
17 ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் சிறந்து விளங்கிய வாக்கேயகாரர் முற்காலத்தில் கீர்த்தனைகளில் பல்லவியும் சரணங்களுமே இடம்பெற்றிருந்தன. பல்லவி அனுபல்லவி சரணம் என்ற அமைப்பு முறையில் முதன் முதலில் கீர்த்தனைகளை இயற்றியவர் முத்துத்தாண்டவராவார். எனவே தான் கீர்த்தனை மரபின் தந்தை எனப்போற்றப்படுகின்றார். இவர் பாடிய கீர்த்தனைகள் அனைத்தும் சிதம்பர நடேசர் மீது பாடப்பட்டவையாகும். தாண்டவர் கீர்த்தனைகளில் நடனத்திற்கேற்ப சொற்கட்டுக்கள் அமைந்திருக்கும். நீண்ட தாளக்கோர்வைகள் கொண்டமைந்ததாக இவரது சொற்கட்டுகள் அமைந்திருந்தன. உதாரணமாக 'ஆடிய வேடிக்கை பாரீர் என்ற கீர்த்தனை குறிப்பிடத்தக்கது. இது சாருகேசி இராகத்தில் அமைந்தது. சரணப்பகுதியில் நீண்ட சொற்கட்டு கொண்டதாக அமைந்துள்ளது.
முத்துத்தாண்டவரைப் பின்பற்றியே கோபாலகிருஸ்ணபாரதியார், பாபநாசம் சிவன், சுந்தானந்தபாரதியார், நீலகண்டசிவன் மாரிமுத்துப்பிள்ளை ஆகியோர் சிவதாண்டவத்தை வர்ணித்து சொற்கட்டுகளோடு கூடிய கீர்த்தனைகளை அமைத்தனர்.
இவர் பூலோககைலாயம் என்ற தொடர்மொழியை முதலடியாக கொண்டு கீர்த்தனைகளைப் பாட ஆரம்பித்தார். இவர் இயற்றிய கீர்த்தனைகள் 60 பதங்கள் 25தெருவாறானோ என்ற கமாஸ் இராக பதம் பிரபல்யம் வாய்ந்தது.இடது பாதம் தூக்கி ஆடும் (கமாஸ்) மாயவித்தை செய்கிறானே. அம்மபவாணன் – (கரகரப்பிரியா) ஆடிக்கொண்டார் (மாயாமாளவகௌளை) இப்பாடலின் சரணத்தில் இரட்டித்த கால சாகிர்த்தியம் அமைக்கப்பட்டுள்ளது
'ஆர நவமணி மாலைகளாட ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத் தேர் ஆட'
இதில் ஆட என்னும் பதம் இறுதியில் வருகின்றது. இம்முறை சம்பந்தர் தேவாரத்திலும் காணப்படுகின்றது
'சடையா யெனுமால் சரண்நீ எனும்மால்
விடையா யெனுமால் வெருவா விழுமால';
இவருடைய கீர்த்தனைகளில் சைவசித்தாந்தக் கருத்துக்களும் பழைமையான வரலாறுகளும் சொற்சுவை, பொருட்சுவை, எதுகை மேனை, தொடை ஆகியவை நயங்கள் கொண்டவையாகவும் விளங்குகின்றன.
அருணாசலக் கவிராயர் (1711 – 1779)
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் மயூரத்தை அடுத்துள்ள தில்லையாடி எனும் கிராமத்தில் பிறந்தவர். இவர் தருமபுரத்திலுள்ள சைவமட்டத்தில் தங்கி சமயநூல்களை நன்கு கற்றுத் தெளிந்தவர். தமிழ்இலக்கண இலக்கியங்களிலும் வடமொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். இவர் கற்ற நூல்களில் கம்பராமாயணரும் திருக்குறளும் குறிப்பிடத்தக்கவை. இதுவே பிற்காலத்தில் இராமநாடக கீர்த்தனைகள் இயற்றுவதற்கு அடிப்படையாக அமைந்தவை. இராமநாடகக் கீர்த்தனைகளில் சூழ்நிலைக்கேற்பவும் பாத்திரங்களின் குண நலனுக்கேற்பவும் இசைவடிவங்களைப் படைத்துள்ளார். இவ்வாறாக 197கீர்த்தனைகளை அமைத்துள்ளார். இவை தவிர கொச்சகம், விருத்தம் தரு கலிப்பா, கலித்துறை திபதைகள் தோடயம் என பல்வேறு பாவினங்களைக் கையாண்டுள்ளார். இவை தவிர சீர்காழி தலபுராணம் சீர்காழிக்கோவை அசோமுகி நாடகம் என்பவைகளையும் இயற்றியுள்ளார்.
அருணாசலக் கவிராயருடைய இராமநாடகக் கீர்த்தனைகள்
இராமருடைய புகழைப் பாடுவதனால் இராமநாடகக் கீர்த்தனை என பெயர் கொடுத்துள்ளார். கவிராயர் இராம நாடகக் கீர்த்தனைகள் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்டு 19 ஆம் நூற்றாண்டில் பெருவழக்கிலிருந்தது. இராம நாடகத்தை கீர்த்தனைகளாக இயற்றியமைக்கான காரணங்கள்.
1. இதுவரையில் இராமநாடகத்தை கீர்த்தனையாக எவரும் செய்யாமை
2.
கீர்த்தனை பாமரமக்களும் கேட்டு இன்புறும் வடிவம்
3.
இராக தாளங்களை குறிப்பதற்கு இரு இசையாளர் உதவியமை

 

 

 

தமிழிசை மூவர் மணிமண்டபம்


முத்துத்தாண்டவர்(கி.பி.1525–1625):
சீர்காழி முத்துத்தாண்டவர் சோழநாட்டில் சீர்காழி சிவதலத்தில் பிறந்தார். முத்துத்தாண்டவர் இசைவேளாளர் மரபில் பிறந்து தில்லை நடராஜப் பெருமானுக்கு தம்முடைய கீர்த்தனைகளையும் பதங்களையும் அர்ப்பணித்து அப்பெருமானோடு இரண்டறக் கலந்துவிட்டார். இவர் பாடிய பல நூறு கீர்த்தனங்களில் 80 கீர்த்தனங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் இன்றை கீர்த்தனம்-கிருதி-மரபுக்கு பிதாமகன் என்று சொல்லத்தக்கவர் சீர்காழி முத்துத்தாண்டவர். சிதம்பரம் நடராசன் பெருமான் மீது அளவில்லாத கீர்த்தனங்களும், பதங்களும் பாடியவர். இவர் 80 வயதுக்கு மேல் வாழ்ந்திருக்கின்றார். மாணிக்கவாசகரிடம் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.

மாரிமுத்தாப்பிள்ளை(கி.பி.1712-1787):
முத்துத்தாண்டவரைப் போல தில்லை நடராஜப் பெருமான் மீது பல கீர்த்தனங்களும், பதங்களும், பாடிய மற்றொரு இசைவாணர் தில்லை விடங்கான் மாரிமுத்தாப்பிள்ளை. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர் வரிசையில் எண்ணத்தக்க வகையில் இவரும் ஒருவர். சிதம்பரத்துக்கு அருகே உள்ள தில்லை விடங்கான் என்ற சிற்றூரில் சைவ வேளாளர் மரபில் பிறந்தவர். இவர் பாடிய கீர்த்தனங்கள் 25, 17 ராகங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவர் பாடிய வருணபுரி குறவஞ்சியில் 170 பாடல்கள் உள்ளன. இவற்றுள் கீர்த்தன வடிவில் உள்ளது 33 ஆகும். இவர் பல தலங்களுக்குச் சென்று சிற்சில பிரபந்தங்கள் இயற்றினார்.

அருணாச்சலக்கவிராயர்(கி.பி.1711–1779):
அருணாச்சலக் கவிராயர் தில்லையாடி என்ற சிற்றூரில் கார்காத்த சைவவேளாளர் குலத்தில் பிறந்தவர். இவர் தமது 60 ஆவது வயதில் இராமநாடகக் கீர்த்தனையைப் பாடியுள்ளார். இராம சரித்திரத்தை கீர்த்தனையாக பாட ஆரம்பித்தார். அப்படி அமைக்கப்பட்ட பாடல்களில் தமிழ்நாட்டில் இக்கீர்த்தனங்களைப் பாடாத இசைவாணர்களே இல்லை என்று கூறலாம். ``ஏன் பள்ளி கொண்டிரய்யா’’ என்ற பாடலை ஸ்ரீரங்கநாதர் மீது பாடியது பிரசித்தி பெற்ற பாடலாகும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூபாய் 1.51 கோடி மதிப்பீட்டில் தமிழிசை மூவர் மணிமண்டபம் அமைக்கப்பட்டு, இம்மண்டபம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் 20.02.2013 அன்று திறந்து வைக்கப்பட்டது

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.