முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Wednesday, December 26, 2018

தமிழ் இசைக் கல்வெட்டு .

தமிழ் இசைக் கல்வெட்டு .



ஈரோடு மாவட்டம் அவல்பூந்துருத்திக்கு அருகில் அமைந்துள்ள பாண்டியர் குழி - அரச்சலூர் என்ற இடத்தில் உள்ள கற்குகையில் இசைக்கல்வெட்டு கண்டறியப்பட்டது.
இது ஈரோடு -> காங்கேயம் பாதையில் 12 கல் தொலைவில் இருக்கிறது .
இது சிலப்பதிகாரம் சொல்லும் சதுரப்பாலையைச் சார்ந்த இசைக்குறிப்பு. இக்கல்வெட்டின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு .
- நடன. காசிநாதன்
அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரையில் “பாலை” என்னும் படவடிவ இசைக் குறிப்புகள் உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படும் எனவும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். அதுபோன்ற ஒரு சதுரப்பாலை வடிவத்தை எழுத்துகளால் பொறித்திருக்கிறார் தேவன் சாத்தன் என்பவர் என்று திரு.துரை சுந்தரம் குறிப்பிடுகின்றார்.
இந்த இரு கல்வெட்டுக்களும் அருகிலேயே கீறப்பட்ட ஓவியம் ஒன்றும் உள்ளது. இது இரண்டு நபர்கள் நிற்பது போன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வடிவம் ஆராயப்படவேண்டிய ஒன்றே.
தமிழ் கல்வெட்டு வட்டெழுத்தாக உருமாற்றம் பெருவதை உணர்த்தும் வகையில் அமைகின்ற கல்வெட்டுச் சான்றாகவும் இந்தக் கல்வெட்டுத் தொகுதி அமைகின்றது என இந்தக் கல்வெட்டை முதலில் கண்டு பிடித்த பேரா.எஸ்.இராசு அவர்கள் குறிப்பிடுகின்றார்.
சங்ககாலத்தின் இறுதியில் தமிழர்கள் ''தமிழிசை குறியீடுகளில்'' தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுத்தப் படுகின்றது.
இசைக் கல்வெட்டு
(1)
த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த
(2)
கை த தை த கை
த தை (த) தை த
தை த தை த தை
த தை (த) தை த
(கை த தை த கை)
காலம் 2nd Cent. A.D என்பர்.
இன்றைக்கு 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கல்வெட்டு தமிழ் இசை உலகை அசைக்க முடியா உச்சத்தில் வைக்கிறது. சிலர் இதனை 1400 ஆண்டுகள் முற்பட்டது என்கின்றனர் . எப்படி இருப்பினும் தமிழிசை காலத்தால் முற்பட்டது.
தமிழிசை வழி வந்த பிற மொழி இந்திய இசைக்கலைஞர்கள் தமிழை தீட்டு மொழி என்றனர் .... ; ஆணவத்தின் விளிம்பில் இருந்தவர்கள் இனி நாவடக்கம் காப்பாரா ? ; தமிழர் இசைத் தொடர்பில் மரபுரிமைக்கு உரியவர்கள் ; மரியாதைக்கு உரியவர்கள்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.