சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்கள்
பாண்டியர் துறைமுகங்கள்
பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. இதற்கு முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சாட்சி. இப்பட்டினங்களால் சங்ககாலப் பாண்டியர்த் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது. அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்ததை மார்க்கோ போலோவின் காயல்பட்டினம் குதிரை வணிகக் குறிப்புகளை கொண்டும், இபின் பட்டுடாவின் பாண்டியர்-ஏமன் கப்பல்கள் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம். குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்ததைக் கொண்டு அக்காலத்தில் பாண்டியர் உலகிலேயே சிறந்த வணிகத் துறைமுகங்களை பெற்றிருந்தது தெரிகிறது.
பிளைனி மற்றும் தாலமி மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக குறித்தனர். முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர் யவனர்களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர். செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.
கொற்கை துறைமுகம்
இந்த கொற்கைநகர் பொ.மு. 600 வரை பாண்டியர் தலைநகராய் இருந்தது. பின்னர் நெடுஞ்செழியன் காலத்திலேயே தற்போதைய மதுரைக்கு பாண்டியர் தலைநகர் மாற்றப்பட்டது. அதன்பிறகும் இந்நகர் சிறப்புக்குன்றாமல் பெரிப்ளூஸ், டாலமி காலம் வரை சிறந்த துறைமுக மற்றும் வணிக நகரமாய் திகழ்ந்தது. முத்துக்குளித்தலுக்கு இந்நகர் பெருஞ்சிறப்பைப் பெற்றிருந்ததை பெரிப்ளூஸின் செங்கடல் செலவு நூல் மூலமாக அறியலாம்
கொற்கை என்பது பாண்டிய முடிக்குரிய இளவரசனின் இருப்பிடமாகும். பாண்டியர்களின் மூன்றாம் தலைநகரம் கொற்கை ஆகும். கடல் கொண்ட தென்னாட்டில் இருந்து மீண்ட பரதவர்கள் உருவாக்கியதே கொற்கை.கொற்கை பாண்டியர்களின் முத்து நகரம்,பாண்டிய நாட்டு வணிக துறைமுகமாகவும்,பாண்டியர்களின் கப்பல் படைத்தளமாகவும் இருந்தது.
புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம். பட்டினப்பாலை எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம். சிறுபாணாற்றுப்படை நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம்.
பெரும்பாணாற்றுப்படை கொற்கை முத்து சிறந்த முத்தாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது.
கொற்கை விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
தலையாங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதுர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான். கடலலை குவிக்கும் முத்துக்கள் செல்வர் ஏறிவரும் குதிரைக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமையும் அளவுக்குக் கொட்டிக்கிடக்கும்.
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோர் தாம் உண்ணும் கள்ளுக்கு விலையாக முத்துக்களைத் தருவர்.
முத்துக்குளிப்பது மட்டுமின்றி வலம்புரிச் சங்கு எடுக்கவும் அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர்.
அங்கு உப்பு விளைவிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த உமட்டியர் கிலுகிலுப்பையில் முத்துக்களைப் போட்டு ஆட்டித் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவர்.
இந்தக் கொற்கைத் துறையில் காலையில் மலரும் நெய்தல் பூப் போலத் தன் காதலியின் கண் இருந்தது எனக் காதலன் ஒருவன் பாராட்டுகிறான்.
மறப்போர்ப் பாண்டியர் கொற்கையில் முத்துக்களைப் பாதுகாக்க வேங்கடமலைப் பகுதியிலிருந்து கொண்டுவந்த யானைகளைப் பயன்படுத்தினர்.
கொற்கைப் பகுதியில் பழையர் எனப்படும் குடிமக்கள் வாழ்ந்துவந்தனர். அந்தக் குடியைச் சேர்ந்த மகளிர் முத்துக்குளிக்கும் துறையை வழிபட்டு விழாக் கொண்டாடும்போது தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், கிளிஞ்சல்களையும் கொட்டிப் படையல் செய்து மகிழ்ந்தனர்.
கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிட்டு அது பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகவும் எழுதியுள்ளார்.
மறைமுகமான துறைமுகம் கொற்கை.
கொற்கை என்பது பண்டைய பாண்டியர்களின் தலைநகரம் என்று சங்க பாடல்கள் சான்றுக் கூறுகின்றன. கண்ணகி மதுரையை எரித்தப்போது பாண்டிய நாட்டின் மன்னராக இருந்த நெடுஞ்செழியனின் தம்பியான வெற்றிவேல் செழியன், கொற்கையை தலைநகராக கொண்டு ஆண்டு வந்துள்ளதாகச் சிலப்பதிகாரம் செப்பிகின்றது. இந்த கொன்றை நகர் மிகப்பெரியக் கடல்துறைமுகமாக இருந்திருகின்றது. சீன யாத்திரிகர் ''யுவான் சுவாங் அவர்களின் குறிப்புகளில் கூட கொற்கைப் பற்றி சில செய்திகள் கூறப்பட்டிருகின்றது . ஆனால் இன்று தமிழ்நாட்டு கடற்புர மாற்றங்களால் துறைமுகமாக இருந்த இந்த நகரம் இன்று ஒரு சிற்றூராக மாறியுள்ளது. ஒருக் காலத்தில் கொற்கை நகரை நீராட்டிய கடல் இன்று 6 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ளது. முன்பு, கொற்கை பக்கமாகத்தான் தாமிரபரணி ஆறு பாய்ந்து கொண்டிருந்ததாம். ஆறு வழியாக, கடலுக்கு பாதை. இன்றோ ஆறும் இல்லை. கடலும் இல்லை.
மடல் விரிந்த வாழைகள், தாரைகள் நீந்தும் குளம், மங்கையின் மார்பிலிருந்து நழுவிய சிற்றாடை போல் நெளியும் சிற்றோடை என மருதநிலத்தின் இலக்கணம் மாறாத அந்த சிற்றூர்தான் அலையடிக்கும் கடலும், நீர்யானை போன்ற நாவாய்களும், சங்கறுக்கும் ஒலியும், முத்துக்கு விலை பேசும் சத்தச் சலனமும் மிக்க நெய்தல் நிலஞ்சார்ந்த பட்டினப்பாக்கமாக விளங்கியதென்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும்.
இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்மதில் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லென
கலிகெழு கொற்கை
என உயர்வு நவிற்சி இல்லாத சங்கப்பாடலே சான்று பகர்ந்தபின் அதை நம்பித்தான் ஆகவேண்டும்.
காலத்துக்கு ஆற்றல் அதிகம். அது மானுட வரலாற்றின் பக்கங்களை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் புரட்டிப் போட்டுவிடும். மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கை அம்பெருந்துறை‘ என அகநானூறு அடையாளம் காட்டும் பாண்டியர்களின் பழம்பதியான கொற்கை தான் இவ்வாறு உருமாறிக்கிடக்கிறது.
கி.மு. 4&ம் நூற்றாண்டு முதல் கி.பி. 4&ம் நூற்றாண்டு வரை நூற்றுக்கும் மேற்பட்ட நம்நாட்டுப்புலவர்களும், வெளிநாட்டு பயணிகளும் கொற்கையின் புகழைப் பாடியிருக்கிறார்கள்.
கொற்கை சரித்திரத்துக்கு சான்று பகரும் பல இடங்களை மன்னர்கள் வேதியர்களுக்கு கோ தானம், பூதானம் செய்து தானமாக வழங்கும் ஊர்களுக்கு ‘மங்கலம் ’என்று பெயர்.
சேந்தமங்கலம், மாறமங்கலம், ஆறுமுகமங்கலம், மங்கலக்குறிச்சி என்று பாண்டிய மன்னர்கள் தானம் வழங்கிய ஊர்களில் சேந்தன், மாறன் என்பதெல்லாம் பாண்டியனின் பட்டப்பெயர்கள். ஆறுமுகமங்கலம் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால் (ஆறு+முக +மங்கலம்) என பெயர் பெற்றது. திருவழுதிநாடார்விளை, கோவன்காடு என்றெல்லாம் பாண்டியன் பெயரைச் சொல்லும் ஊர்கள் கொற்கையை சுற்றி உண்டு.
அக்காலத்தில் அனைத்து ராஜ்யங்களுக்கும் இரு தலைநகரங்கள் இருந்தன. சேரருக்கு வஞ்சி, முசிறி, சோழருக்கு உறையூர், பூம்புகார், பாண்டியர்களுக்கு கொற்கை, மதுரை. பெரும்பாலும் ஒரு நகரம் நிதி ஆதாரத்துக்கும், மற்றொரு நகரம் நிர்வாகத்துக்கும் வசதியாக இருந்தது.
கணிசமான கடல் வருமானம் இருந்ததால் பாண்டிய இளவரசர்கள் கொற்கையில் தங்கியிருந்து நிதி நிர்வாகம் செய்திருக்கின்றனர். மற்ற மன்னர்களைப் போலன்றி பாண்டியர்களுக்கென்று ஒரு மாறுபட்ட குணம் உண்டு. இவர்கள் முன்னோர்கள் குன்றுபோல் சேர்த்த சொத்தை குந்தியிருந்து சாப்பிட்டு அழிக்கமாட்டார்கள். புதிது ,புதிதாக வருவாயை பெருக்குவார்கள் என அரபி பயணி இதான் பதூதா தன் பயணக்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார்.
கொற்கைக்குமிக அண்மையில் அக்காசாலை என்று அழைக்கப்படுகிற அக்கசாலை இருக்கிறது. இது பாண்டியர்களின் ரிசர்வ் வங்கி. (அக்கம்= பாண்டவர்கள் வெளியிட்ட நாணயம். அதை அச்சடிக்கும் (தொழிற்)சாலை அக்கசாலை).இந்தப்பகுதியில் ‘ ஏர வெற்றிவேல்செழியன் ’என்று வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட செப்புக்காசுகள் கிடைத்துள்ளன. இந்த அக்கசாலை கொல்லர்களின் வம்சாவளியினர் இன்றளவும் ஏரலில் வசிக்கின்றனர். கண்ணகியின் காற்சிலம்பை திருடி மன்னனின் கோபத்துக்கு முன்னோர்கள் ஆளாகிவிட்டதால் அஞ்சி இடம்பெயர்ந்துவிட்டதாக இவர்கள் கூறுகிறார்கள்.
உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது.காலங்காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்க முடியாத சான்றுகள்.
கொற்கை குளம் நடுவே கோவிலொன்று உள்ளது. அதில் உறையும் தெய்வத்தை வெற்றிச் செல்வியம்மன் என்றும், வெற்றிச் செழியஅம்மன் என்றும் இருவிதமாக அழைக்கிறார்கள். கி.பி. 2&ம் நூற்றாண்டளவில் வடிவமைத்த சிலை இங்கு இருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் தான் சிலப்பதிகாரம் அரங்கேறியிருந்தது. அதில் கூறப்படும் வெற்றிச்செழியன் எனும் பாண்டியனின் பெயரால் அக்கோயில் வழங்கியிருக்கலாம்.
ஆள்பவர்கள் பெயரில் ஆண்டவரை அழைப்பது அக்கால மரபு.
கொற்கை குளத்துக்கோவிலுக்குள் முற்காலத்தில் கண்ணகி சிலையே இக்கோவில் கருவறையில் இருந்ததாக கூறுகிறார்கள். கண்ணகி புகழ் பரவத்தொடங்கிய காலகட்டத்தில், தன் முன்னோர் இழைத்த அநீதிக்காக பொங்கிய கண்ணகியின் கோபத்தை தணிக்க பாண்டியன் இந்த ஆலயத்தை அமைத்துள்ளான்.
கி.பி. முதல் நூற்றாண்டின் முடிவுக் காலத்தில்தான் கண்ணகிக்கு நீதி பிழைத்த நெடுஞ்செழியன் வாழ்ந்தான். அவனது வழித்தோன்றலான வெற்றிச்செழியன், திருட்டுப்பழியை கண்ணகி மேல்சுமத்தி தன் குலக்கொம்பை தலை கவிழச்செய்த கொல்லர்களின் தலைவிழச்செய்ய வேண்டுமென்று வன்மம் கொண்டான்.
எனவே, கற்புத் தெய்வத்தின் ஆத்திரம் ஆற, அக்கசாலையில் வாழ்ந்த ஆயிரம் கொல்லர்களை அவள் கோவில் முன்பு கழுவேற்றினான். நரபலி கொடுத்த பின் வெறுமனே விட்டுவிடக்கூடாது என்பதற்காக பின்னாட்களில் எருமைகள் ஆயிரம் பலியிட்டதாக கூறுகிறார்கள். இங்கு எழுந்தருளியுள்ள வெற்றிச்செழிய அம்மன் சிலையின் தலை சற்று சாய்ந்துள்ளது. எருமைப்பலியை அம்மன் ஏற்காததால் அவள் தலை திரும்பி இருப்பதாகவும் ஐதீகம் நிலவுகிறது.
ஊர் மந்தையில் வன்னிமரம் ஒன்று வயோதிபத்தால் தரை சாய்ந்து கிடக்கிறது. அதன் வயதை 2000 ஆண்டுகள் என்று தொல்லியல் துறையினர் கணிக்கின்றனர். மரத்தின் அருகே வீரன் ஒருவனின் நடுகல்லும் சற்றுத்தள்ளி சமண முனிவர் சிலையும் கிடைத்திருக்கிறது. சுரங்கப்பாதை ஒன்றும் தூர்ந்து கிடக்கிறது.
ஊருக்கு வடமேற்கில் ஓடும் சிற்றோடையின் நடுவே ‘கன்னிமார் குட்டம்’ என்று அழைக்கப்படும் குறுநீர்த்தேக்கம் உள்ளது. பாண்டிய இளவரசிகள் இதில் குளித்ததாக பேசிக்கொள்கிறார்கள். ஊருக்குள் எங்கு தோண்டினாலும் சங்கும், சிப்பியும் கிடைக்கின்றன. பெரிய, பெரிய வெண்சங்குகளை வீடுகளிலும் தோட்டங்களிலும் வைத்து அலங்கரித்திருக்கிறார்கள்.
அறுக்கப்பட்ட சங்கும், சங்கு வளையல்களும் அகழ்வாராய்ச்சிக்குழுவினருக்கு மூட்டை மூட்டையாய் கிடைத்திருப்பதால் சங்கு ஆபரணம் தயாரிக்கும் தொழிற்சாலை அங்கு இருந்ததை அறிந்துள்ளனர்.
சங்கு குளிப்போர் அமரும் இருக்கைகளையும், கள் அருந்துவோர் உறையும் சிறிய ஊர்களையும் உடையது கொற்கை என்ற சங்க பாடலுக்கு ஆதாரத்தை சங்கொலித்து கூறுகின்றன இந்த சான்றுகள். சங்கும் கள்ளும் கொற்கை கடற்கரையில் சங்கமித்திருக்கின்றன.
முத்து வணிகம் கி.பி.1ம், 2ம் நூற்றாண்டுகளில் மும்முரமாக இருந்துள்ளது. முத்தோடு குரங்கும், மயில் தோகையும், வாசனை திரவியங்களும் கிரேக்க, ரோம் தேசங்களுக்கு கொற்கை துறைமுகத்திலிருந்து போயிருக்கிறது. ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்,கொற்கை பொருட்கள் மீது மக்களுக்கு ஏற்பட்ட மோகத்தால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிடும் எனப்பயந்து இறக்குமதிக்கு தடை விதித்துள்ளான்.
ஆதித்தமிழர்களின் கட்டடத்துக்கு ஆதாரக் கல்லாக விளங்கிய பெரிய சைஸ் செங்கல்கள், ஓடுகள் கொற்கை குளத்துக்குள் கிடைத்திருக்கின்றன. முதுமக்கள் தாழியும் நிறைய கிடைத்திருப்பதால் இப்போதைய குளம் அப்போதைய இடுகாடு என்போரும் இருக்கிறார்கள்.
மண்ணால் செய்த வலிமையான உறைகிணறுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக உறைக்கிணறுகள் எளிதில் மண் தூருகின்ற நெய்தல், பாலைப் பகுதிகளில்தான் அமைக்கப்படும் என்பதால் கொற்கை துறைமுகப்பகுதி என்பது உறுதியாகிறது.
அகரம் அருகே துறைமுக சாஸ்தா கோவில் ஒன்று உள்ளது. அப்போதைய கொற்கை கோட்டத்துக்கு உட்பட்ட உமரிக்காட்டில் கோட்டை வாழ் ஐயன் கோவில் உள்ளது. ஆறுமுக மங்கலத்தில் பெரும்படை சாஸ்தா கோவில் உள்ளது.புன்னக்காயல் பக்கம் கோட்டைமூலக்காடு என்ற இடம் உள்ளது. இவை எல்லாமே பாண்டிய ராஜாங்க படை, பல பராக்கிரமங்களோடு தொடர்புடையது.
பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாமே பாண்டியர்களை கொற்கையோடு தொடர்பு படுத்தி பேசுகின்றன.‘மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கையம் பெருந்துறை’ என்பது அகநானூறு.‘நற்றிறம் படரா கொற்கை வேந்தே’என்கிறாள் சிலப்பதிகார கண்ணகி.
குமரித் தென் கடலில் கடல்கோளால் அழிந்த பண்டைய பாண்டிய நாட்டிலிருந்து மறுபிறவி எடுத்ததுபோல் மீண்ட பாண்டியர்கள் வடக்கு நோக்கி மறுவாழ்வு தேடி வந்தனர். கடலோடிகளான அவர்கள் கண்டறிந்து தங்கிய இடம் தான் கொற்கை. இனம் அழிந்த பெருந்துயரிலிருந்து நீங்கி வம்சவிருத்தி செய்து வருவாய் ஈட்டி அரசாட்சியை அடைந்த நிகழ்வுகள் கொற்கையில் இருந்தபோதே நடந்திருக்க வேண்டும். கடல் பின்வாங்கி கொற்கை தனது சிறப்பை இழந்தபின்பும் நன்றி மறவா நற்பண்பு காரணமாக எங்கு சென்றாலும் கொற்றம் அளித்த கொற்கையை நினைவு கூர்ந்துள்ளனர்.
செயற்கை கோள் எடுத்த தூத்துக்குடி படம் மூலம் ஒரு உண்மைதெரிந்துள்ளது. தற்போது ஏரலுக்கு தெற்கே ஓடும் தாமிரபரணி ஆறு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ஓடியுள்ளது. அதன் முகத்துவாரத்தில் இருந்ததால்தான் ஆறுமுகமங்கலத்துக்கு அப்பெயர் வந்தது. கொற்கைக்கு 1 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்த கனவி சமுத்திரத்தில் தாமிரபரணி கடலில் கலந்திருக்கவேண்டும் என்பது நிபுணர்கள் கணிப்பு. ஏரலுக்கு வடக்கே நட்டாத்தியம்மன் கோவில் ஒன்று உள்ளது. நடு ஆற்றுக்குள் அமைந்த கோவிலே நட்டாத்தியம்மன் கோவில்.
‘ கொல் ’என்றால் முத்து. கொற்கை முத்துக்குளித்துறைமுக நகரம்.‘ கபாடம் ’என்றாலும் முத்து என்று ஒரு பொருள் உண்டு. பாண்டியர்களின் பழமையான தலை நகரமான கபாடபுரம் பொருநை நதிக்கரையில் தான் அமைந்திருந்ததாக சொல்பவர்களும் உண்டு. ராமாயாணமும், மகாபாரதமும், கவுடில்யரின் அர்த்தசாஸ்திரமும் குறிப்பிடும் கபாட மாநகர் கொற்கை தானா? கடல்கொண்ட லெமூரியாவையும், பூம்புகாரையும் ஆராயத்தான் அரசு தயங்குகிறது என்றால் மண்கொண்ட கொற்கையை யாவது விரிவாக ஆய்வு செய்யவேண்டும்.
அழகன்குளம் துறைமுகம்
இங்கு கிடைத்த ரோமானியர் காசுகள், மட்கலன்கள், பானை ஓடுகள் போன்றவை இந்த அழகன்குளத்தின் தொடர்ச்சியான வரலாறுகளை கி.மு. 4 - கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரையிலும் அறிய உதவுகிறது. அதன்படி இதுவும் ஒரு சங்ககாலத் துறைமுகம். இதன் பெயர் நேரடியாக சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை ஆயினும் தாலமி குறிப்பிடும் அர்கெய்ரு என்ற நகரம் இதுவாக இருக்கலாம். ஆனாலும் இந்த ஆர்கெய்ரு சோழரின் உறையூர் என்பது நீலகண்ட சாஸ்திரி போன்றோரின் கருத்து.
மருங்கூர் துறைமுகம்
இம்மருங்கூர் மருங்கூர்ப் பட்டினம் மற்றும் ஊணூர் என்று இரண்டு துறைமுகப் பட்டினங்களை அடக்கியது. தாலமி இதை சாலூர் எனக்குறிக்கிறார்.
நீலகண்ட நகரம் துறைமுகம்
இந்நகரம் சேர நாட்டிலிருந்தாலும் பிளைனி காலத்தில் மட்டும் இது பாண்டியர் துறைமுகமாக திகழ்ந்தது. இங்கிருந்தே செங்கடல் துறைமுகங்களுக்கு மிளகு ஏற்றுமதி அதிகளவு நடந்ததாகத் தெரிகிறது.
சங்ககாலத்துக்குப் பின், முற்கால பாண்டியர் காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர் காலம் வரை பாண்டி நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக உறவுகள் வளர காரணமாயிருந்தது. இதன் விளைவாகவே 25க்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் பட்டினம் என்ற பின்னொட்டு பெயரோடு தோன்றின.
செங்கடல் செலவு குறிப்பிடும் துறைமுகங்கள்
முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட துறைமுகப் பட்டினங்கள் பற்றி அறிய தொண்டி, பெரியபட்டினம், பழைய காயல், போன்ற பல இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளும், அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா போன்ற பல்வேறு நாட்டவர் குறிப்புகளும், கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் போன்றவையும் துணைபுரிகின்றன.
இந்த துறைமுகங்களிலிருந்து நெல், அரிசி, உப்பு, அவிழாகட்டு, பயித்தம் பருப்பு, அவரை, துவரை, ஆமணக்கு, எள், கடுகு, சீரகம், வெங்காயம், புளி, கருப்பட்டி, மஞ்சள், பாக்கு, மிளகு, சுக்கு, தேன், சந்தனம், அகில், பன்னீர், கற்பூரம், சாந்து, புனுகு, கஸ்தூரி, சவ்வாது, புடவை, பருத்திப் புடவை, நூல் புடவை, நொய் புடவை, பரும்புடவை, பட்டு, நூல், கொடி, கணபம், இரும்பு, செம்பு, வெண்கலம், குதிரை, யானை, ஒட்டகம், சவுரி மயிர், முத்து, சிப்பி, மணிகள் போன்றவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் கல்வெட்டுகளில் உள்ளது.
திருச்செந்தூர். (கபாடபுரம்)
தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் வட்டத்தில் திருச்செந்தூர் [THIRUCHENDUR] அமைந்துள்ளது. கடற்கரைக்கோயில் நகரமானதிருச்செந்தூர் ,வடக்கு அட்ச ரேகை 8.483 டிகிரியும் கிழக்குதீர்க்கரேகை 78-1167 டிகிரி என்னும் பாகையில் அமைந்துள்ளது.சங்க காலச்சிறப்பு மிக்க இவ்ஊரின் எல்கைகளாக இவ்வூரோடும் முருகப்பெருமானோடும்
தொடர்புடைய சோனகன்விளை[SONAGANVILAI],
அம்மன்புரம்[AMMANPURAM],
குலசேகரன்பட்டினம்[KULASEKARANPATINAM],
வீரபாண்டியன்பட்டினம்[VIRAPANDIANPATINAM],
காயல்பட்டினம்[KAYALPATINAM]
ஆறுமுகனேரி[ARUMUGANERI] ஆகிய ஊர்கள் உள்ளன.
கோயிலின் மூலவர் உற்சவர் விபரம்
மூலவர் -அருள்மிகு பாலசுப்பிரமணியர்
உற்சவர் -அருள்மிகு சண்முகர்,ஜெயந்திநாதர்
குமாரவிடங்கப்பெருமாள்,
அலைவாய் உகந்தபெருமாள்
அம்மன் -அருள்மிகு வள்ளி ,அருள்மிகு தெய்வானை
தீர்த்தம் -கந்தபுச்கரணி [நாழிக்கிணறு],சரவனப்பொய்கை
தலமரம் -பன்னீர் மரம்
பாடியவர்கள் -நக்கீரர்,பகழிக்கூத்தர்,அருணகிரிநாதர்,
குமரகுருபரர்,வென்றிமாலைக் கவிராயர்
பழமையும் சிறப்பும்-பெயர்க் காரணமும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தின் தென் கோடியில் தலைசிறந்த கடற்கரைப்பட்டினமாக விளங்கிய கபாடபுரம்,இன்றைய திருச்செந்தூராகும்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில்அமைந்துள்ள திருச்செந்தூர் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப் பகுதியாகும்.ஓயாமல்அலைகள் அடித்துக் கொண்டிருந்ததால் அலைவாய் என்றும் முற்காலத்தில் அழைக்கப்பட்டது.
1986 வரை திருநெல்வேலி மாவட்டத்திலும் தற்போது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகப்பிரிவிலும் உள்ள திருச்செந்தூர்,சங்ககாலத்தில் குட நாடு என்ற நிர்வாகப்பிரிவில் இருந்தது. ஊரின் மேற்கே பசுமையான வயல் வெளிகளும்,தோட்டங்களும், தெற்கே உவர் நிலங்களும் காணப்படுகின்றன. இவ்விருவகை நிலங்களுக்கும் மகடம் வைத்தாற்போல பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குன்று உள்ளது.வெள்ளைப் பாறைகளால் ஆன இக்குன்றுசந்தனாமலை என்று போற்றப்படுகிறது.குறிஞ்சி நிலக்கடவுளான முருகப்பெருமான் இம் மலையில்அமர்ந்துள்ளார்.இம்மலை மீது அமையப் பெற்ற 134 அடிக்கோபுரம்திருச்செந்தூருக்கு வெகு தொலைவில் வரும் போதே நம்மை வா...வா என்றழைக்கும்.கையெடுத்து தலை மீது வைத்துத் திசைநோக்கித் தொழ வைக்கும்.
பெயராய்வு
மக்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து இனங் காண பெயர்களை வழங்கியது போல தாங்கள் வசித்த இடத்திற்கும் பெயரிட்டுப் பெருமை கொண்டனர்.இயற்கையோடு தங்கள் வாழ்வு நெறி முறைகளை இணைத்துக் கொண்டனர்.இயற்கையோடுதங்களுடைய தங்களுடைய தெய்வங்களை வழிபட்டுக் கொண்டனர்.இயற்கைப் பெயரினை தாங்கள் வாழ்ந்த இடத்திற்கு இட்டுக்கொண்டனர்.இவ்வடிப்படையிலேயே திருச்செந்தூர் என்ற பெயர் பல்வேறு மாற்றங்களைப் பெற்று உருவாயிற்று.
கபாடபுரம்
ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பாண்டிய மன்னர்களின்
இரண்டாம் தமிழ்ச்சங்கம் செயல்பட்ட கபாடபுரம் என்ற
தமிழூர் திருச்செந்தூர் ஆகும்.கபாடம் என்றால் முத்து.உலகம் போற்றிய ஒளிவிடும் முத்து விளைந்த பகுதியாக திருச்செந்தூரின் கடற்பகுதி முன்னாளில் விளங்கியது.
கபாடபுரம் பற்றி வால்மீகி தான் இயற்றிய இராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்தில் இல்ங்கை நோக்கிச்செல்ல இருந்த அனுமனுக்கு சில அறிவுரைகளைக் கூறும் போது,
‘ததோ ஹேமமயம் திவ்யம் முக்தாமணி விபூஸ்யதம்
முக்தா கபாடம் பாண்ட்யானாம் கதா திருக்யசவானரா’
என்று கூறுகிறார்.
‘தமிழ் நாட்டில் தென்பாண்டி நாடான மதுரையைக் கடந்து நீ செல்லும்போது முத்லில் ஒரு ஊர் வரும்.அங்கு நீ இறங்கி விடாதே.இறங்கி விட்டால் அந்த ஊரை விட்டு நீ இலங்கைசெல்ல உன் மனம் விரும்பாது.ஏனெனில் அங்குள்ள நாகரீகமும்;பண்பாடும் உன்னை இழுக்கும் எனவே அங்குநிற்காமல் தொடர்ந்து போ அதற்கு அடுத்தாற்போல இலங்கைவரும்’ இராமாயணக் காலத்தில் கபாடபுரம் இருந்தது என்பதும் உறுதியாகிறது.
முதலில் தமிழ்ச்சங்கம் குமரி நாட்டில் தென் மதுரையில் செயல்பட்டது. கடல் கோளினால குமரி நாடு அழியவே வடதிசை நோக்கிக் . குடிபெயர்ந்தனர். குமரியாற்றிற்கும் தாமிரபரணிக்குமிடையே உள்ள கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் தழிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.பாண்டிய மன்னருள் அப்பேறு பெற்றவன் வெண்தேர்ச்செழியன் ஆவான்.அவனைத் தொடர்ந்து 59 பாண்டியமன்னர்கள் ஆண்டனர். அந்நாளிலும் கடல் கோள்[சுனாமி]ஏற்படவே, கடைசி அரசனான முடத்திருமாறபாண்டியன் தப்பிப் பிழைத்து தற்போதுள்ள மதுரையைத் தலைநகராகக் கொண்டு கடைச்சங்கத்தைத் தோற்றுவித்தான். இஃது தமிழறிஞர்களின்கூற்று ஆகும்.
இரண்டாம் தமழ்ச்சங்கத்தின் காலம் கி.மு.6804 முதல்கி.மு.3105 வரை ஆகும்.3700 ஆண்டுகள் கபாடபுரம் பொருணை[தாமிரபரணி]ஆற்றின் முகத்துவாரத்தில் [அலைவாய்]இருந்தது.இச்சங்கத்தில் அகத்தியர்,குன்றம் எறிந்தகுமரவேள்[முருகன்] ஆகியோர் புலவர்களாக இருந்தனர்.73 புலவர்கள் கவி பாடி அரங்கேற்றினர்.கபாடபுரம் என்றபெயர் காலவெள்ளத்தில் வழக்கொழிந்து போனது. திருச்செந்தூரில் காண்ப்படும் கல்வெட்டொன்று, ‘திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்று இவ்வூரைக்
குறிப்பிடுகிறது. இப்பெயரும் வழக்கொழிந்து போயிற்று.சதுர் வேதம் என்றால் நான்கு வேதங்களாகும்.நான்கு வேதங்களும் இடையறாது ஒலிக்கும் ஊர் என்றும்,அவ் வேதங்களை ஓதும்அந்தணர்களுக்கு[வேதியர்களுக்கு]தானமாகக் கொடுக்கப் பெற்றஊர் என்றும் பொருள்படும்.வேதியர்களான திரிசுதந்திரர்கள்2000 மக்கள் திருச்செந்தூரிலிருந்து முருகனுக்குத் தொண்டுசெய்து வந்தனர்.இன்றும் அவர்களது வாரிசுகள் உள்ளனர்.
பாண்டியர் துறைமுகங்கள்
சங்ககாலம் தொட்டேமுத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின்ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. இதற்கு முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்டதுறைமுகப்பட்டினங்களே சாட்சி. இப்பட்டினங்களால்சங்ககாலப் பாண்டியர்த் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது. அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்ததை மார்க்கோ போலோவின் காயல்பட்டினம் குதிரை வணிகக் குறிப்புகளை கொண்டும், இபின் பட்டுடாவின் பாண்டியர்-ஏமன் கப்பல்கள் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம்.குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாகமார்க்கோ போலோ குறித்ததைக் கொண்டு அக்காலத்தில் பாண்டியர் உலகிலேயே சிறந்த வணிகத் துறைமுகங்களை பெற்றிருந்தது தெரிகிறது.
பண்டைய துறைமுகங்கள்.
பிளைனி மற்றும் தாலமி மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக குறித்தனர். முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர் யவனர்களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர். செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை,அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.
துறைமுகங்கள.
கொற்கை
இந்த கொற்கை நகர் பொ.மு. 600 வரை பாண்டியர் தலைநகராய் இருந்தது.[4] பின்னர் நெடுஞ்செழியன் காலத்திலேயே தற்போதைய மதுரைக்கு பாண்டியர் தலைநகர் மாற்றப்பட்டது.[5] அதன்பிறகும் இந்நகர் சிறப்புக்குன்றாமல் பெரிப்ளூஸ், டாலமி காலம் வரை சிறந்த துறைமுக மற்றும் வணிக நகரமாய் திகழ்ந்தது. முத்துக்குளித்தலுக்கு இந்நகர் பெருஞ்சிறப்பைப் பெற்றிருந்ததை பெரிப்ளூஸின் செங்கடல் செலவு நூல் மூலமாக அறியலாம்.[6] கொற்கையில் கிடைத்த தமிழி எழுத்து படித்த பானை ஓட்டின் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் கி.மு. 785 ± 95 எனக் கணிக்கப்பட்டது. அப்பானை ஒட்டுடன் கிடைத்த கரித்துண்டு இது அப்போதே துறைமுகமாய் விளங்கியதை காட்டுகிறது.[7] இதிலிருந்து கொற்கை கி.மு. 1000 தொட்டே செயல்ப்படதாகக் கூறலாம்.
முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர் துறைமுகங்கள்.
சங்ககாலத்துக்குப் பின், முற்கால பாண்டியர் காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர் காலம் வரை பாண்டி நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக உறவுகள் வளர காரணமாயிருந்தது. இதன் விளைவாகவே 25க்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் பட்டினம்என்ற பின்னொட்டு பெயரோடு தோன்றின. அவை,
பட்டியல்
பெயர் (நாடு). காலம். தற்போதைய பெயர் அல்லது வட்டம். ஆற்றுக்கழிமுகம்
01. தொண்டி (முத்தூர்க்கூற்றம்). பொ.பி. 875க்கு முன் - 1368. திருவாடானை வட்டம்.
02. மானவீரப்பட்டினம் (மானவீரவளநாடு). பொ.பி. 875க்கு முன்மருதூர், சாத்தான்குளம்
வட்டம். கருமானியாறு.
03. பாசிப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்).பொ.பி. 875 - 1090. திருவாடானை வட்டம்.
பாசியாறு.
04. உலகமாதேவிப்பட்டினம் (செவ்விருக்கை நாடு)பொ.பி. 875 - 1368 இளங்கோமங்கலம்,
திருவாடானை வட்டம்.
05. நானாதேசிப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்). பொ.பி. 875 - 1368. வீரகேரளபுரம்,
திருவாடானை வட்டம்.
06. பவித்ரமாணிக்கப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 875 - 1368. இராமநாதபுரம்
வட்டம்.கப்பலாறு.
07. மேன்தோன்றிப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 875 - 1090. இராமநாதபுரம்
வட்டம்.
08. கேரளாந்தகபுரம் (குரங்குடிநாடு). பொ.பி. 875 - 1090. பட்டினமருதூர்,விளாத்திக்குளம்
வட்டம். மலட்டாறு.
09. குலோத்துங்கச்சோழப்பட்டினம்(மிழலைக்கூற்றம்). பொ.பி. 1090 - 1271
மணமேல்குடி, ஆவுடையார்கோயில் வட்டம். வெள்ளாறு
10. பெரியபட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1090 - 1368. இராமநாதபுரம் வட்டம்.
கப்பலாறு.
11. குலசேகரப்பட்டினம் (மானவீரவளநாடு). பொ.பி. 1090 - 1368. சாத்தான்குளம் வட்டம்.
கருமானியாறு.
12. ஆவுடையார்பட்டினம் (மிழலைக்கூற்றம்). பொ.பி. 1271 - 1368. ஆவுடையார்கோயில்
வட்டம். வெள்ளாறு
13. சுந்தரபாண்டியன்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்). பொ.பி. 1271 - 1368. திருவாடானை
வட்டம். பாம்பாறு.
14. நீர்ப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்). பொ.பி. 1271 - 1368கண்ணங்குடி, திருவாடானை
வட்டம்.
15. புதுப்பட்டினம் (செவ்விருக்கைநாடு). பொ.பி. 1271 - 1368. திருவாடானை வட்டம்.
16. சீவல்லபப்பட்டினம் (செவ்விருக்கைநாடு). பொ.பி. 1271 - 1368. புறக்குடி,
திருவாடானை வட்டம்.
17. நினைத்ததை முடித்தான் பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1271 - 1368. கீழக்கரை,
இராமநாதபுரம் வட்டம்
18. குண்டாறுஇருவரைவென்றான் பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1271 - 1368.
இராமநாதபுரம் வட்டம்.
19. வல்லபப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1271 - 1368. ஏறிக்கிட்டூர்,
இராமநாதபுரம் வட்டம்.
20. தத்தையார்ப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1271 - 1368. இராமநாதபுரம் வட்டம்
21. முடிவீரன்பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1271 - 1368. இராமநாதபுரம் வட்டம்.
22. கோதண்டராமன்பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1271 - 1368. இராமநாதபுரம்
வட்டம்.
23. ஏறிவீரப்பட்டினம் (அளற்றுநாடு). பொ.பி. 1271 - 1368. இடைவழி, முதுகுளத்தூர்
வட்டம்.
24. வென்றுமுடிசூடிய சுந்தரபாண்டியப்பட்டினம் (பராந்தகவளநாடு). பொ.பி. 1271 - 1368
ஸ்ரீவைகுண்டம் வட்டம்.
25. காயல்பட்டினம் (குடநாடு). பொ.பி. 1271 - 1368. திருச்செந்தூர் வட்டம்
26. தாமிரபரணி சோனாடு கொண்டான்பட்டினம் (குடநாடு). பொ.பி. 1271 - 1368.
திருச்செந்தூர் வட்டம். பாம்பாறு.
27. வீரபாண்டியன் பட்டினம் (குடநாடு). பொ.பி. 1271 - 1368. திருச்செந்தூர் வட்டம்.
பாம்பாறு.
28. முத்துராமலிங்கப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்). திருவாடானை வட்டம் பாசியாறு.
29. அம்மாப்பட்டினம். ஆவுடையார்கோயில் வட்டம். அம்புலியாறு
தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள்.

வணிகப் பொருட்கள்.
இந்த துறைமுகங்களிலிருந்து நெல், அரிசி, உப்பு, அவிழாகட்டு, பயித்தம் பருப்பு, அவரை, துவரை, ஆமணக்கு,எள், கடுகு, சீரகம், வெங்காயம், புளி, கருப்பட்டி,
மஞ்சள், பாக்கு, மிளகு, சுக்கு, தேன், சந்தனம், அகில், பன்னீர்,கற்பூரம், சாந்து, புனுகு,
கஸ்தூரி, சவ்வாது, புடவை, பருத்திப் புடவை, நூல் புடவை, நொய் புடவை, பரும்புடவை,பட்டு, நூல், கொடி, கணபம், இரும்பு, செம்பு, வெண்கலம், குதிரை, யானை, ஒட்டகம், சவுரி மயிர், முத்து, சிப்பி,மணிகள் போன்றவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் கல்வெட்டுகளில் உள்ளது.
வணிக நகரங்கள்.
கடலோர வணிகத் துறைமுகங்கங்களுக்குத் துணையாக உள்ளூர் வணிக நகரங்களும் அமைந்திருந்தன. கடற்கரைத் துறைமுகப்பட்டினங்களும் உள்ளூர் வணிக நகரங்களும் பெருவழிகளால் இணைந்திருந்தன. இதற்கு உதாரணமாக மதுரையிலிருந்து தொண்டி செல்லும் பெருவழியிலேயே இடையாற்று நாட்டு பூவேந்தியபுரமும், தென்களவழிநாட்டு முடிகொண்ட பாண்டியபுரமும் இருந்ததையும்,, அதே போல் கீரனூர்கூற்றத்து கங்கைகொண்ட பெருந்தெருவும், காணப்பேர்கூற்றத்து கானபேர் பெருந்தெருவும் முத்தூர்கூற்றத்தையும் பல துறைமுகங்களையும் இணைத்ததையும் கொள்ளலாம்.
வணிகக் குழுக்கள்.
இத்துறைமுக மற்றும் வணிக நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதியைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் வணிகர்கள், பண்டங்களை மாற்றுவதற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இடைத்தரகர்கள், இறக்குமதியைக் கவனிக்கும் வெளிநாட்டு வணிகர்கள் போன்றவர்கள் அமைத்த நகரங்களும் பட்டினங்களும் இருந்தன. அவற்றுள் பல வணிகக் குழுக்கள் இருந்தன. அவை,
வரிகளும் கொடைகளும்
மேற்குறிப்பிட்ட வணிகக்குழுக்கள் அனைத்துமே ஏதாவது ஒரு விதத்தில் கோயில்களுக்குக் கொடையோ அல்லது பெருவழிகளின் உபயோகத்திற்காக வரியோ செலுத்தி அரசாங்கத்துக்கு உதவியதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர் போன்றோர்கள் உலகமாதேவிப்பட்டினம் என்ற ஊரிலுள்ள திருஞான சம்பந்தன் தளம் என்ற கோவிலிற்குப் பல கொடைகளை அளித்துளனர். இக்கோயிலுக்கான பாக்கு, மிளகு போன்றவற்றிற்கு ஆட்சுமைக்கு ஒருமாப்பணமும் உறுக்களில் ஏற்றும் சிறுகலங்களின் கட்டொன்றிற்கு அரைக்கால் பணமும் வாங்கியுளனர். மேலும் இப்பட்டினத்திற்கு வரும் சிற்றுரு, தோணி போன்ற கலங்களில் வரும் பொருட்களுக்கு முறையே அரைக்கால் மற்றும் கால் பணமும் வாங்கியுளனர்.
காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற பட்டினங்களிலிருந்து வரும் பெரும்வழிகளை உபயோகிக்கும் மற்ற வணிகர்களிடமிருந்து வரும் வரிகளை வீரபாண்டியன்புரத்து கோயிலொன்றுக்கு அளித்துள்ளனர்.
நினைத்ததை முடித்தான் பட்டினத்தில் இருந்த முத்து வணிகர்களான திசையாயிரத்து ஐநூற்றுவர் அதில் பெறப்படும் வரியை அவ்வூர்க் கோயிலுக்குத் தானமளித்துளனர்.

மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள்
காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வலுப்படுத்தும் விதமாக இந்த செட்டிகளைப் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.
நகரத்தார்
முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இந்நகரத்தின் கட்டுப்பாடு அரச குடும்பத்தின் கீழமைந்த நகரத்தார் என்னும் வணிகக்குழுக்களிடம் இருந்தது.
மணிக்கிராமத்தார், சாமக பண்டசாலிகள்
இவர்கள் மேற்கு கடற்கரைகளுக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் வணிகத்தை கவனிப்பவர்கள்.
நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விசயத்தார்
இவ்வணிகக் குழுக்கள் தென்னிந்தியா முழுவதுமே புகழ்பெற்றவை. சாயல்குடியில் இக்குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட ஏறிவீரப்பட்டினம் உள்ளதை அடுத்து இவர்களின் வணிகச்சிறப்பை அறியலாம்.
தென்னிலங்கை வளஞ்சியர்
இவர்கள் தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும்.
சோனகரர்
இவர்கள் அரேபிய வணிகக் குழுக்களுள் ஒரு குழுவினர்
அஞ்சுவண்ணம்
இவர்களும் அரேபியர்களே. இவர்களைப் பற்றிய ஆய்வு நூல்கள் பல தமிழில் வந்ததை வைத்தே இவர்களின் சிறப்பை அறியலாம்.
திருப்புடைமருதூர் ஓவியங்கள், புன்னைக்காயலில் அரபிய வணிகர்கள் உலாவுவது போல் காட்டப்பட்டுள்ளது .

காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற பட்டினங்களிலிருந்து வரும் பெரும்வழிகளை உபயோகிக்கும் மற்ற வணிகர்களிடமிருந்து வரும் வரிகளை வீரபாண்டியன்புரத்து கோயிலொன்றுக்கு அளித்துள்ளனர். நினைத்ததை முடித்தான் பட்டினத்தில் இருந்த முத்து வணிகர்களான திசையாயிரத்து ஐநூற்றுவர் அதில் பெறப்படும் வரியை அவ்வூர்க் கோயிலுக்குத் தானமளித்துளனர்.
நன்றி
1. பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்கள், வணிகத் தொடர்புகள்.
(கி.பி. 600-1400), வெ.வேதாச்சலம், மதுரை.
2. தமிழகக் கடல்சார் ஆய்வுகள், ந. அதியமான் மற்றும் பா. ஜெயக்குமார்,
தமிழ்ப் பல்க்லைக்கழகம், தஞ்சாவூர், நவம்பர் 2006.

- சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.

- மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள் - காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வலுப்படுத்தும் விதமாக இந்த செட்டிகளைப் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.
- நகரத்தார் - முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இந்நகரத்தின் கட்டுப்பாடு அரச குடும்பத்தின் கீழமைந்த நகரத்தார் என்னும் வணிகக்குழுக்களிடம் இருந்தது.
- மணிக்கிராமத்தார், சாமக பண்டசாலிகள் - இவர்கள் மேற்கு கடற்கரைகளுக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் வணிகத்தை கவனிப்பவர்கள்.
- நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விசயத்தார் - இவ்வணிகக் குழுக்கள் தென்னிந்தியா முழுவதுமே புகழ்பெற்றவை. சாயல்குடியில் இக்குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட ஏறிவீரப்பட்டினம் உள்ளதை அடுத்து இவர்களின் வணிகச்சிறப்பை அறியலாம்.
- தென்னிலங்கை வளஞ்சியர் - இவர்கள் தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும்.
- சோனகரர் - இவர்கள் அரேபிய வணிகக் குழுக்களுள் ஒரு குழுவினர்.
- அஞ்சுவண்ணம் - இவர்களும் அரேபியர்களே. இவர்களைப் பற்றிய ஆய்வு நூல்கள் பல தமிழில் வந்ததை வைத்தே இவர்களின் சிறப்பை அறியலாம்.
வரிகளும் கொடைகளும்
மேற்குறிப்பிட்ட வணிகக்குழுக்கள் அனைத்துமே ஏதாவது ஒரு விதத்தில் கோயில்களுக்குக் கொடையோ அல்லது பெருவழிகளின் உபயோகத்திற்காக வரியோ செலுத்தி அரசாங்கத்துக்கு உதவியதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர் போன்றோர்கள் உலகமாதேவிப்பட்டினம் என்ற ஊரிலுள்ள திருஞான சம்பந்தன் தளம் என்ற கோவிலிற்குப் பல கொடைகளை அளித்துளனர். இக்கோயிலுக்கான பாக்கு, மிளகு போன்றவற்றிற்கு ஆட்சுமைக்கு ஒருமாப்பணமும் உறுக்களில் ஏற்றும் சிறுகலங்களின் கட்டொன்றிற்கு அரைக்கால் பணமும் வாங்கியுளனர். மேலும் இப்பட்டினத்திற்கு வரும் சிற்றுரு, தோணி போன்ற கலங்களில் வரும் பொருட்களுக்கு முறையே அரைக்கால் மற்றும் கால் பணமும் வாங்கியுளனர்.
காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற பட்டினங்களிலிருந்து வரும் பெரும்வழிகளை உபயோகிக்கும் மற்ற வணிகர்களிடமிருந்து வரும் வரிகளை வீரபாண்டியன்புரத்து கோயிலொன்றுக்கு அளித்துள்ளனர்.
நினைத்ததை முடித்தான் பட்டினத்தில் இருந்த முத்து வணிகர்களான திசையாயிரத்து ஐநூற்றுவர் அதில் பெறப்படும் வரியை அவ்வூர்க் கோயிலுக்குத் தானமளித்துளனர்.
இத்துறைமுக மற்றும் வணிக நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதியைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் வணிகர்கள், பண்டங்களை மாற்றுவதற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இடைத்தரகர்கள், இறக்குமதியைக் கவனிக்கும் வெளிநாட்டு வணிகர்கள் போன்றவர்கள் அமைத்த நகரங்களும் பட்டினங்களும் இருந்தன. அவற்றுள் பல வணிகக் குழுக்கள் இருந்தன. அவை,
மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள்
காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வலுப்படுத்தும் விதமாக இந்த செட்டிகளைப் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.
நகரத்தார்
முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இந்நகரத்தின் கட்டுப்பாடு அரச குடும்பத்தின் கீழமைந்த நகரத்தார் என்னும் வணிகக்குழுக்களிடம் இருந்தது.
மணிக்கிராமத்தார், சாமக பண்டசாலிகள்
இவர்கள் மேற்கு கடற்கரைகளுக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் வணிகத்தை கவனிப்பவர்கள்.
நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விசயத்தார்
இவ்வணிகக் குழுக்கள் தென்னிந்தியா முழுவதுமே புகழ்பெற்றவை. சாயல்குடியில் இக்குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட ஏறிவீரப்பட்டினம் உள்ளதை அடுத்து இவர்களின் வணிகச்சிறப்பை அறியலாம்.
தென்னிலங்கை வளஞ்சியர்
இவர்கள் தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும்.
சோனகரர்
இவர்கள் அரேபிய வணிகக் குழுக்களுள் ஒரு குழுவினர்
அஞ்சுவண்ணம்
இவர்களும் அரேபியர்களே. இவர்களைப் பற்றிய ஆய்வு நூல்கள் பல தமிழில் வந்ததை வைத்தே இவர்களின் சிறப்பை அறியலாம்.
திருப்புடைமருதூர் ஓவியங்கள், புன்னைக்காயலில் அரபிய வணிகர்கள் உலாவுவது போல் காட்டப்பட்டுள்ளது .
மேற்குறிப்பிட்ட வணிகக்குழுக்கள் அனைத்துமே ஏதாவது ஒரு விதத்தில் கோயில்களுக்குக் கொடையோ அல்லது பெருவழிகளின் உபயோகத்திற்காக வரியோ செலுத்தி அரசாங்கத்துக்கு உதவியதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர் போன்றோர்கள் உலகமாதேவிப்பட்டினம் என்ற ஊரிலுள்ள திருஞான சம்பந்தன் தளம் என்ற கோவிலிற்குப் பல கொடைகளை அளித்துளனர். இக்கோயிலுக்கான பாக்கு, மிளகு போன்றவற்றிற்கு ஆட்சுமைக்கு ஒருமாப்பணமும் உறுக்களில் ஏற்றும் சிறுகலங்களின் கட்டொன்றிற்கு அரைக்கால் பணமும் வாங்கியுளனர். மேலும் இப்பட்டினத்திற்கு வரும் சிற்றுரு, தோணி போன்ற கலங்களில் வரும் பொருட்களுக்கு முறையே அரைக்கால் மற்றும் கால் பணமும் வாங்கியுளனர்.
காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற பட்டினங்களிலிருந்து வரும் பெரும்வழிகளை உபயோகிக்கும் மற்ற வணிகர்களிடமிருந்து வரும் வரிகளை வீரபாண்டியன்புரத்து கோயிலொன்றுக்கு அளித்துள்ளனர். நினைத்ததை முடித்தான் பட்டினத்தில் இருந்த முத்து வணிகர்களான திசையாயிரத்து ஐநூற்றுவர் அதில் பெறப்படும் வரியை அவ்வூர்க் கோயிலுக்குத் தானமளித்துளனர்.
நன்றி
1. பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்கள், வணிகத் தொடர்புகள்.
(கி.பி. 600-1400), வெ.வேதாச்சலம், மதுரை.
2. தமிழகக் கடல்சார் ஆய்வுகள், ந. அதியமான் மற்றும் பா. ஜெயக்குமார்,
தமிழ்ப் பல்க்லைக்கழகம், தஞ்சாவூர், நவம்பர் 2006.
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.