முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Saturday, November 17, 2018

இந்திய அரசியல் அமைப்பும் தேர்தலும் - அறிந்து கொள்வோம்




அகில இந்திய 16வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 7ம் திகதி  முதல் மே 12ம் திகதி வரையில் 9 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பெற்றுள்ள நிலையில் அரசியல் சம்பந்தமான விபரங்களை அறிந்திருப்பது முக்கியம் என்பதனால்  நாம் அறிந்தவரையில் விபரங்களை அறியத்தருகின்றோம்.
இந்திய மக்கள் தொகை: 120 கோடி
வாக்காளர்கள் தொகை: 81.4 கோடி
தேர்தல் தொகுதிகள்: 545
அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை: 370
புதிய வாக்காளர்கள்: 10 கோடி
தேர்தல் முடிவுகள்: 16.05.2014 வெளியாகும் என அறிவிக்கப்பெற்றுள்ளது
இந்தியக் குடியரசு (India) என்றழைக்கப்பெறும் பாரத தேசம்; சுமார் 70 வருடங்களிற்கு முன்னர் இந்தியப் துணை கண்டத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில் பாகிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய நாடுகள் சேர்ந்த ஒரு பெருநிலப்பரப்பாக இருந்துள்ளது.


இந்திய பெருநிலப்பரப்பானது பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் கைப்பற்றப்பட்டு, ஆங்கிலேயர் காலத்தில் 1947, ஓகத்து 15 அன்று (சுதந்திரம்) விடுதலை பெற்றது. அதனைத் தொடர்ந்து 1950, சனவரி 26 அன்று குடியசு நாடாக பிரகடனப் படுத்தப் பெற்று உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது


ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது


அப்போது, இந்திய துணைக் கண்டமானது மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானாகவும் பிரிந்தது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளாக இருந்த மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானிடையே 1971-இல் மூண்ட உள்நாட்டுப் போரின்போது இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாகிஸ்தான் வங்காள தேசம் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது


இந்தியாவின் தெற்கே இந்தியப் பெருங்கடலும், (இந்துசமுத்திரம்) மேற்கே அரபிக் கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும்  எல்லைகளாக அமைந்துள்ளது. அத்துடன் இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கித்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியனவும் அமைந்துள்ளன. இலங்கை, மாலத்தீவு இலட்சத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருநிலத்திற்கு அண்மையில் இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள தீவுகளாகும்


உலகநாடுகளின் பரப்பளவில் ஏழாவது பெரிய நாடாகவும், 7,517 கிமீ (4,700 மைல்) நீளம் வரை கடலை எல்லையாக கொண்ட நாடாகவும் நூற்றி இருபது கோடி மக்கள் தொகையையும் கொண்ட நாடாகவும் இந்தியா விளங்குகின்றது


மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டன.


அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12ஆம் நூற்றாண்டில் வரத்தொடங்கினர். இவர்களை தொடர்ந்து ஐரோப்பிய வர்த்தகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரத்தொடங்கினர்.


முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது.


இந்திய அரசியல் சாசனம்
இந்தியா 28 மாநிலங்களையும் 7 ஒன்றியங்களையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு அதிகார பூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது


இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான அதிகாரப் பயன்பாடுகளை, ஊழலை கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றி கட்டமைக்கப்பட்டுள்ளன


இந்திய நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் பாராளுமன்ற மற்றும் மாநில, பிரதேச சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்


செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது


பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.


இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவைமாநிலங்களவைமற்றும்மக்களவைஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.






இந்திய நாடாளுமன்ற மக்களவை
மக்களவை அல்லது லோக் சபா இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.


இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினரகளான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.


ஆங்கிலோ இந்தியரை பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும். இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.


2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் மூலம் நாட்டின் 16 வது மக்களவை பொதுமக்களால் தெரிவு செய்யப்பெறுவார்கள் இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பின்னர் இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும்


இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை அல்லதுராஜ்ய சபாஇந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் உள்ளிட மேலவை ஆகும்


இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறர்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். இதன் கட்டமைவு இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளதின்படி அமைக்கப்பட்டுள்ளது.


இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார்.


மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறுவதாகும் சபை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது


இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளை இரு அவைகளின் கூட்டு கூட்ட அமருவின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டு கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) தடை (வீட்டோ) அதிகாரங்களை கொண்டதாக கூட்டு கூட்டங்களில் கருதப்படுகின்றது.




மாநிலங்களவையின் தற்பொழுதய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு அமீத் அன்சாரி பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்லைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர். மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.


மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில- பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும்


இந்திய மக்களவைக்கு அதிகபட்சமாக 552 உறுப்பினர்கள் வரை இருக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனம் வழிமுறை காட்டுகிறது. இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தும் 20 உறுப்பினர்கள் மத்திய ஆட்சிப்பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படலாம்


குடியரசுத்தலைவர் விரும்பினால் இரண்டு ஆங்கிலோ-இந்தியர்களையும் நியமிக்கலாம். இவ்வாறாக இந்தியா மக்களவைக்கு அதிகபட்சமாக 552 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் தற்போது மதிய ஆளுமைப் பகுதிகளில் இருந்து 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் மக்களவையின் தற்போதைய உறுப்பினர்கள் 545 ஆகும். மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.


இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயல் படுகிறது. உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையான பிரச்சினைகள் தொடர்பாக ஆள் வரை உண்டு. மேலும் மேன் முறையீடு ஆள் வரையும் உயர் நீதிமன்றங்கள் மீது உண்டு. பெரிய மாநிலங்களுக்கு ஒன்றும் சிறிய மாநிலங்களுக்கு பொதுவாகவும் 18 உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்திலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.




இந்தியாவின் மாநிலங்களும் பிரதேசங்களும்
இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் 28 மாநிலங்களும் ஆறு ஒன்றியப் பகுதிகளும் ஒரு தேசியத் தலைநகரப் பகுதியும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன



ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்


1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன


அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது


மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 600 மாவட்டங்கள் உள்ளன.


1.    ஆந்திரப் பிரதேசம்
2.    அருணாச்சல் பிரதேசம்
3.    அஸ்ஸாம்
4.    பிஹார்
5.    சத்தீஸ்கர்
6.    கோவா
7.    குஜராத்
8.    ஹரியானா
9.    இமாசலப் பிரதேசம்
10.    ஜம்மு காஷ்மீர்
11.    ஜார்க்கண்ட்
12.    கர்நாடகம்
13.    கேரளம்
14.    மத்தியப் பிரதேசம்
15.    மகாராஷ்டிரம்
16.    மணிப்பூர்
17.    மேகாலயா
18.    மிசோரம்
யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்:
A.    அந்தமான் நிக்கோபார் தீவுகள்
B.    சண்டிகர்
C.    தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
D.    தாமன், தியு
E.    லட்சத்தீவுகள்
F.    புதுச்சேரி
G.    தில்லி

இந்த ஏழு ஒன்றியப் பகுதிகளில் புதுச்சேரியும், தில்லியும் மட்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு அனுமதியின் பேரில் ஏனைய மாநிலங்களைப் போல தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைகள் அமைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளன.



இந்தியாவில் மாவட்டம் (district, அல்லது Zilā, ஜில்லா) என்பது இந்திய மாநிலத்தின் பகுதியை நிர்வகிக்கும் மண்டலமாகும். இந்தியா இருபத்தியெட்டு மாநிலங்கள் மற்றும் ஏழு ஆட்சிப்பகுதிகள் (.) ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலம் அல்லது ஆட்சிப் பகுதியும் எளிதான நிர்வாகத்திற்காக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன


2008இல் இந்தியாவில் 585 மாவட்டங்கள் இருந்தன. ஒரு மாவட்டத்தின் எல்லைகளை மாற்றவோ, புதிய மாவட்டங்களை உருவாக்கவோ அல்லது இருக்கும் மாவட்டங்களை இணைக்கவோ அந்தந்த மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது.முதன்முதலாக இத்தகைய மண்டல நிர்வாகப் பகுதியை மாவட்டம் எனக் குறிப்பிடப்பட்டது பட்டியலிட்ட மாவட்ட சட்டம்,1874யில் ஆகும்.


மாவட்ட ஆட்சியர் (சில மாநிலங்களில் துணை ஆணையர் அல்லது மாவட்ட நீதிபதி என அழைக்கப்படுகின்றனர்) மாவட்டத்தின் பொதுநிர்வாகத்தையும் வருவாய் வசூலையும் நிர்வகிக்கிறார். இவர் இந்திய ஆட்சி பணிசேவை (..) அதிகாரியாவார். இவரே மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பிற்கும் பொறுப்பேற்கிறார்.காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை துணை ஆணையர் (இந்திய காவல் பணிசேவை (.கா.) அதிகாரி) இப்பணியில் மாவட்ட ஆட்சியருக்கு உதவுகிறார்.


மாவட்டங்கள் மேலும் வருமான மண்டலங்கள்,தாலுகாக்கள் (தெகிசில்கள்),வட்டாரங்கள் (பஞ்சாயத்து யூனியன்),பஞ்சாயத்துக்கள் மற்றும் கிராமங்களாக பிரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.


சில மாநிலங்களில், நிலப்பரப்பு கூடுதலாக இருப்பின்,(மாவட்டங்களின் எண்ணிக்கை நிர்வகிக்க இயலாமற்போவதால்) சில மாவட்டங்களை இணைத்து மண்டலங்கள் (டிவிசன்கள்) உருவாக்கப்படுகின்றன.அதன் நிர்வாக அதிகாரி மண்டல நீதிபதி என அழைக்கப்படுகிறார்.தமிழ்நாடு மாநிலத்தில் இம்முறை இல்லை.



19.    நாகாலாந்து
20.    ஒரிஸா
21.    பஞ்சாப்
22.    ராஜஸ்தான்
23.    சிக்கிம்
24.    தமிழ் நாடு
25.    திரிபுரா
26.    உத்தரகண்ட்
27.    உத்தரப் பிரதேசம்
28.    மேற்கு வங்காளம்
29.    தெலுங்கானா((* மாநில பிரிவு/உருவாக்கம் முழுமை அடையவில்லை))

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.