முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Wednesday, November 14, 2018

"வாதாபியிலும் தமிழ்நாட்டிலும் உள்ள ஆதாரம்"

"வாதாபியிலும் தமிழ்நாட்டிலும் உள்ள ஆதாரம்"
---------------
பாதாமி போரின் மூலம் விநாயகர் தமிழ்நாட்டுக்கு வந்தார் என்பதை உறுதி செய்ய பல ஆதாரங்கள் உள்ளன:
1. பாதாமியில் இல்லை, தமிழ்நாட்டில் இருக்கிறார்.
பல்லவர்களின் படைத்தளபதி பரஞ்சோதியின் சொந்த ஊரான திருவாரூர் அருகே உள்ள திருசெங்காட்டன்குடியில் வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட அதே பிள்ளையார் சிலை இப்போதும் உள்ளது.
ஆனால், உண்மையான வாதாபியில் உள்ள கணபதி கோவிலில் இப்போது கணபதி சிலை இல்லை. பாதாமி நகரில் எந்தக் கோவிலில் இருந்து சிலையை எடுத்தார்களோ - அதே கோவில் இப்போதும் சிலை இல்லாத கோவிலாகவே இருக்கிறது. (அக்கோவில் இப்போது கீழ் சிவாலயம் -Lower Shivalaya- என்று அழைக்கப்படுகிறது)
(Lower Shivalaya can be seen which is dedicated to Vatapi Ganapati which actually means the Ganapati of Badami (earlier known as Vatapi). The idol is missing, only the base has survived. Vatapi Ganapati is famous in ancient texts.)


 தமிழகத்தின் பிள்ளையார் வழிபாடு என்பது வட இந்திய பழக்கம் இல்லை. மாறாக, வடநாட்டு மன்னர்களை தமிழ் மன்னர்கள் வெற்றி கொண்டதன் அடையாளம் ஆகும். அது இந்துக்களின் வீரத்தையோ இந்தியர்களின் வீரத்தையோ கொண்டாடுவது அல்ல. மாறாக, தமிழர்களின் வீர அடையாளம் ஆகும்
கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் விநாயகர் தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு முந்தைய தமிழ் இலக்கியங்களில் அப்படி ஒருவர் குறிக்கப்படவில்லை.
"தமிழ்நாட்டிற்கு பிள்ளையார் வந்த வரலாறு"
தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும்.
கி.பி. 642 ஆம் ஆண்டில் பாதாமியில் நடந்த இந்தப் போரின் போது இரண்டாம் புலிகேசி மன்னனை, மாமன்னன் நரசிம்மவர்ம பல்லவன் வெற்றிகொண்டான். அப்போது, பாதாமியில் இருந்து கொண்டுவந்த பிள்ளையார் சிலைதான் தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாட்டின் தொடக்கம் ஆகும்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.