முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Wednesday, November 14, 2018

"புவி வெப்படைய காரணம் என்ன?"

"புவி வெப்படைய காரணம் என்ன?"

நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள், மின்சாரம் உள்ளிட்டவற்றின் கண்டுபிடிப்பு தொழிற்புரட்சியை வேகப்படுத்தியது. அந்த தொழிற்புரட்சியில் முன்னணியில் இருந்த நாடுகள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தன. அந்த நாடுகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. கூடவே, கார்ப்பரேட் முதலாளித்துவ பொருளாதார முறை வளர்ந்தது. தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் இதனை மிக மோசமான பேரழிவாக மாற்றிவிட்டது.
ஒரு காலத்தில் மனித வாழ்க்கைக்கும் இயற்கைக்குமான உறவு - ஒரு அன்னைக்கும், அவளிடம் பால் குடிக்கும் குழந்தைக்குமான உறவாக இருந்தது. இன்று கார்ப்பரேட் பேராசை உலகம் அதனை 'பூதகியிடம் இரத்தம் குடித்த கிருஷ்ணனின் உறவாக' மாற்றி விட்டது (அன்று, கிருஷ்ணன் பூதகியிடம் இரத்தம் குடித்து கொன்றார். இன்று, நாம் பூமித்தாயை கொலை செய்கிறோம்!).
1860 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மொத்தம் 1993 ஜிகா டன் கரியமில வாயு பூமியின் வளிமண்டலத்தில் கலக்கவிடப்பட்டது (ஒரு ஜிகா டன் என்பது 100 கோடி டன் ஆகும்). அவ்வளவு கரியமிலவாயுவும் இப்போதும் வளிமண்டலத்திலேயே நீடிக்கிறது. அவற்றோடு ஆண்டுதோரும் வெளிவிடப்படும் கூடுதல் கரியமிலவாயுவும் சென்று சேர்கிறது. 1990 ஆம் ஆண்டில் உலகில் வெளியான கரியமில வாயுவின் மொத்த அளவு 20 ஜிகா டன் ஆகும். இதுவே 2017 ஆம் ஆண்டில் 32.5 ஜிகா டன் ஆகும். இப்படியாக ஆண்டுக்காண்டு கரியமிலவாயு வெளியாகும் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இவ்வாறு, கடந்த 150 ஆண்டுகளில் புவியின் வளிமண்டலத்தில் கலக்க விடப்பட்ட கரியமிலவாயுவில் 22% அமெரிக்க நாட்டிலிருந்தும், 18% ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், 13% சீனாவில் இருந்தும் கலக்க விடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருந்தும் இந்தியாவின் பங்கு 6% அளவு மட்டுமே!
இந்தக் கரியமிலவாயு வளிமண்டலத்தின் வெப்பநிலையை அதிகரிக்கிறது. 1850 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடையே புவியின் மேற்பரப்பு வெப்பநிலையில் சராசரியாக 1% டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது கடந்த 11,000 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை ஆகும். இந்த வெப்பநிலை ஆண்டுக்காண்டு அதிகரித்து செல்கிறது! அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில், இந்த வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸ் அளவை கடக்கும் என கணிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.