முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Sunday, November 11, 2018

மரவள்ளி_கிழங்கு

#மரவள்ளி_கிழங்கு
எங்க ஊருல இந்த மழை காலங்களில் அதிகம் உணவாக பயன்படும் கிழங்கு வகை.
இந்த கிழங்க மரவள்ளி கிழங்கு னு வடார்காடு பகுதிலையும், டெல்டா பகுதில சவ்வாரிகட்ட கிழங்கு னும், சென்னை பக்கம் ஆள்வள்ளி கிழங்கு னும், சேலம் & தர்மபுரி பக்கம் குச்சி கிழங்கு னும், கோயம்புத்தூர், திருப்பூர் & கேரளா பக்கம் கப்ப கிழங்கு னும், தென் மாவட்டங்கள்ல வேர் கிழங்கு னும் சொல்லபடுது...
எங்க ஊர் பக்கம் இத வெறுமனே வேகவைச்சி சாப்புடுவாங்க,

 




அதுல உப்பு காரம் போட்டு தாளிச்சிம் சாப்புடுவாங்க... இத சாயந்திரம் நொறுக்கு தீனியா சாப்பிடுறது வழக்கம்...
மதிய உணவுக்கு​ அவியல், கூட்டு & மசியல் னு சாப்பாடோட சாப்புட்டா செமயா இருக்கும்...
வீட்டுக்கு விருந்தாளிங்க வந்த இந்த கிழங்க சீவி போட்டு தேவையான பொருள போட்டு வடை மற்றும் அடை செய்வாங்க... இதோட ருசி சாப்டவங்களுக்கு தெரியும்...
இத பல வகையில சிப்ஸா செஞ்சி கடையில வச்சி விப்பாங்க... அது எல்லா ஊருலையும் கிடைக்கும்...
இத வயல் வெளியிலயே/வீட்டுல மழை நேரத்துல நெருப்புல சுட்டு உரிச்சி சாப்புடுவாங்க... அந்த குளிருக்கு அவ்வளவு நல்லா இருக்கும்...
அவ்வளவு ஏன் அத அறுவடை செய்யும் போது மண்ணுல இருந்து புடுங்கும் போது வரும் வாசனைக்கே அதை அப்பவே வெட்டி உரிச்சி சாப்பிடுவோம்... அதோட ருசிக்கு எங்க சோழ தேசமே அடிமை...
இத மாவா அரைச்சி சவ்வருசியாவும் முகத்துக்கு போடுற பௌடர் தயாரிக்கிறாங்க னு சொல்றாங்க(உறுதியா தெரியல)... இத சுத்தம் செஞ்சி பதப்படுத்தி மைதா தயாரிக்க முடியும்... அத தான் நாம பரோட்டா செய்ய பயன்படுத்துறோம்...
மரவள்ளி கிழங்கு எங்க மண்ணோட அடையாளத்துல இதுவும் ஒன்னு...

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.