டெங்கு என்றால் என்ன?
டெங்கு காய்ச்சல் என்பது மனிதனிடமிருந்து கொசுவுக்கும் கொசுவிலிருந்து மனிதனுக்குமாக பரவும் ஒரு தொற்று நோயாகும். டெங்கு வைரஸ் எனப்படும் தீநுண்மத்தால் இந்நோய் தாக்குகிறது. டெங்கு வைரசில் நான்கு வகைகள் உள்ளன. இவற்றை மனிதர்களிடையே பரப்பும் ஊடகமாக செயல்பட்டு ஏடீஸ் வகைக் கொசுக்கள் நோயைப் பரப்புகின்றன. டெங்கு வைரஸ் நேரடியாக ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு தொற்றுவதில்லை.
இந்நோய் வந்தால் கடுமையான காய்ச்சலுடன் கடுமையான மூட்டுவலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்றவை ஏற்படும். மிகுந்த வலி ஏற்படுத்துவதால் இது எலும்பை முறிக்கும் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது.
டெங்கு நோயின் தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலோர் அறிகுறிகளின்றிக் காணப்படுவர், அல்லது சாதாரண காய்ச்சல் மட்டுமே இருக்கும். மற்றவர்களுக்கு திடீரென அதிகரித்துச் செல்லும் கடுமையான காய்ச்சல், தலைவலி, கண் பின்பகுதி வலி, உடல்வலி, எலும்பு வலி, களைப்பு, வாந்தி, குமட்டல், தொண்டைப்புண், சுவையில் மாற்றம், தோல் தடித்து சிவப்படைதல் - இப்படிப் பல பாதிப்புகள் ஏற்படும்.
டெங்கு காய்ச்சல் தீவிரமடையும் போது அது டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever - DHF) எனும் நிலையை அடையும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். இந்த தீவிர நிலையின் போது கடுமையான காய்ச்சலுடன் தோலின் சில பகுதிகள் இரத்தமாக மாறுதல், ஈறுகளில் இரத்தக்கசிவு, மூக்கில் இரத்தக்கசிவு, இரத்தத்துடன் வாந்தி எனும் கடுமையான நிலை ஏற்படும்.
மிக அரிதாக டெங்கு அதிர்ச்சி நோய் (Dengue Shock Syndrome - DSS) என்பதும் தாக்கக்கூடும். இது மிகக்கடுமையானது என்றாலும் ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவுதான்.
டெங்கு ஆபத்தானதாகக் கருதப்படுவது ஏன்?
உலகின் வெப்பமண்டல நாடுகளில் கொசுவால் ஏற்படும் தொற்று நோய்களில் டெங்குதான் மிகப்பெரிய தொற்று நோயாகக் கருதப்படுகிறது. டெங்குவின் தாக்குதலும் அதனால் ஏற்படும் இழப்பும் அதிகமாகி வருவதால் அதுகுறித்த அச்சம் அதிகமாக்கியுள்ளது. புவி வெப்பமடைவதால் டெங்கு தாக்கும் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. அதன் வீரியமும் அதிகமாகி வருகிறது.
டெங்கு காய்ச்சலால் (Dengue Fever) பாதிப்படைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. 1955 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் ஆயிரம் பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்திடம் பதிவு செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டில் 22 லட்சம் பேராக அதிகரித்துவிட்டது.
இப்போது உலகம் முழுவது 128 நாடுகளில் சுமார் 397 கோடி பேர் டெங்குவால் பாதிக்கப்படும் வாய்ப்புடன் வாழ்கின்றனர். இவர்களில் 5 கோடி முதல் 10 கோடி பேர் வரை ஒவ்வொரு ஆண்டும் டெங்குவால் தாக்கப்படுகின்றன்ர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் டெங்கு தாக்குதல் 30 மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
டெங்குவின் தீவிர நிலையான டெங்கு குருதிப்போக்கு காய்ச்சலால் (Dengue Haemorrhagic Fever) பதிப்படைந்து ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் மருத்துவ மனைகளில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் 95 விழுக்காட்டினர் 15 வயதுக்கு கீழான குழந்தைகளாகும். அதாவது டெங்குவால் அதிக அளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.
டெங்கு குருதிப்போக்கு காய்ச்சலால் பாதிப்படைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரில் ஆயிரம் பேரில் 25 பேர் இறக்கும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை மருத்துவமனைகளில் சேர்க்காமல் விட்டுவிட்டால் ஆயிரம் பேரில் 200 பேர் வரை இறக்கும் ஆபத்து உள்ளது.
இத்தனைக் கொடிய நோயாக இருந்த போதிலும், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க உரிய மருந்து எதுவும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதுபோல டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியும் எதுவும் இல்லை.
டெங்கு பரவுவது எப்படி?
ஏடீஸ் எகிப்தி (Aedes aegypti) மற்றும் ஏடீஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) எனும் இரண்டு கொசுக்கள்தான் டெங்குவைப் பரப்புகின்றன. அதிலும் ஏடீஸ் எகிப்தி கொசுதான் மிகப்பெருமளவில் டெங்குவைப் பரப்புகிறது. ஏடீஸ் கொசுக்களுக்கு புலிக்கொசு என்ற பெயரும் உண்டு. ஏடீஸ் வகைக் கொசு பொதுவாக பகலில் மட்டுமே கடிக்கிறது. அதிலும் குறிப்பாக சூரிய உதயத்தில் தொடங்கி காலை வேளையிலும், மாலையில் சூரியன் மறைவதற்கு சிலமணி நேரம் முன்பிருந்தும், சூரியன் மறைந்த பின் இரண்டு மணி நேரம் வரையிலும் வரையிலும் கடிக்கிறது. அதன் பிறகு வெளிச்சம் இல்லாத இரவில் டெங்கு கொசு கடிப்பது இல்லை. இதனால் ஏடீஸ் கொ
டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் நல்ல நீரில்தான் உற்பத்தியாகின்றன. கழிவு நீர், சாக்கடைப் போன்ற இடங்களில் இவை உற்பத்தியாவது இல்லை. இந்த வகைக் கொசுக்கள் பெரும்பாலும் வீடுகளுக்கு உள்ளே மறைவான பகுதிகளிலும், கட்டடங்களுக்கு உள்ளேயும் வசிக்கின்றன. சுமார் நான்கு வார காலம் மட்டுமே உயிர்வாழும் இவை உற்பத்தியான இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே செல்கின்றன.
ஏடீஸ் வகைக் கொசுக்களில் ஆண் கொசு மனிதனைக் கடிப்பதில்லை. பெண் கொசு மட்டுமே கடிக்கிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட மனிதர்களைக் கடிக்கும் கொசுவிற்கு டெங்கு வைரஸ் தொற்றுகிறது. அந்தக் கொசு மற்ற மனிதர்களைக் கடிப்பதால் டெங்கு மற்றவர்களுக்கு பரவுகிறது. ஒரே கொசு ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்களைக் கடிப்பதால், பலருக்கும் நோய்த்தொற்றுகிறதுசுக்களை ஆங்கிலத்தில் Day Biter என்றும் அழைக்கின்றனர்.

டெங்குவை ஒழிப்பது எப்படி?
தனிமனிதர்களுக்கு டெங்கு தொற்றாமல் தடுக்க தடுப்பு மருந்து எதுவும் இல்லை. அவ்வாறே, டெங்கு தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மருந்து ஏதும் இல்ல. எனவே, டெங்குவை ஒழிக்க ஒரே வழி, அதற்கு காரணமான ஏடீஸ் எகிப்தி கொசுவை ஒழிப்பதுதான்! டெங்கு பரவும் காலங்களில் மட்டும் மேம்போக்கான நடவடிக்கைகளை எடுப்பது கொசுவை ஒழிக்க போதுமானது அல்ல. திட்டமிட்ட நீண்டகால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது அவசியமாகும்.
ஏடீஸ் எகிப்தி கொசுவை ஒழித்துக்கட்டி உலகில் ஏற்கனவே சில நாடுகள் சாதித்துள்ளன. சிங்கப்பூர் நாடு 1973 இல் தொடங்கி 1989க்குள் இக்கொசுவை ஒழித்துள்ளது. கியூபா நாடு 1982 இல் தொடங்கி 1997க்குள் இக்கொசுவை ஒழித்துள்ளது. அதே போன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் ஏடீஸ் எகிப்தி கொசுவை ஒழிப்பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.