முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Wednesday, November 14, 2018

அதிசய ஒற்றுமை!"--நாடியா முராத்

"நோபல் பரிசு பெற்ற நாடியா முராத்தும் தமிழ்க்கடவுள் முருகனும்: அதிசய ஒற்றுமை!"
-------------------
நாடியா முராத் என்பவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இவர் ஈராக் நாட்டில், மயில் கடவுள் வழிபாட்டை கைவிட்டு இஸ்லாமை ஏற்க மறுப்பதால் வேட்டையாடப்பட்ட இனத்தை சேர்ந்தவராகும்.
நாடியா முராத் சார்ந்த ஈராக்கின் யாசிடி பழங்குடியினரின் கடவுள் நம்பிக்கையும், மத அடையாளங்களும் - தமிழ்நாட்டின் முருகக் கடவுள் நம்பிக்கை போன்றே இருப்பது வியப்பளிக்கும் ஒற்றுமை ஆகும்.
-------------------
"நாடியா முராத் என்பவர் யார்?'
நாடியா முராத் ஈராக்கின் யாசிடி பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆகும். சிரியா எல்லையை ஒட்டியுள்ள ஈராக்கின் சின்ஜார் நகரை 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். அங்கிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களையும் முதியவர்களையும் கொலை செய்துவிட்டு, பெண்களையும், சிறுமிகளையும் மட்டும் பாலியல் அடிமைகளாக இட்டுச்சென்றனர். அவர்களில் அப்போது 21 வயதான நாடியா முராத் ஒருவராகும்.
ஈராக்கின் மோசுல் நகரில் 3 மாதங்கள் தீவிரவாதிகளால் கூட்டு பலாத்காரம், பாலியல் வன்முறை, தாக்குதல்களுக்கு ஆளாகி, பின்னர் தப்பி வந்து ஜெர்மனி நாட்டில் தஞ்சம் புகுந்தார். தானே பலமுறை பாலியல் அடிமையாக விற்கப்பட்டு, மீண்டும் மீண்டும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வரலாற்றை உலகெங்கும் எடுத்துச்சொன்னார்.
தனது யாசிடி இன மக்களுக்காகவும், போரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நாடியா முராத், பாலியல் அடிமைகளுக்கான ஐநா.வின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். காங்கோ நாட்டின் டென்னிஸ் முக்வேஜா என்பவருக்கும் நாடியா முராத்துக்கும் கூட்டாக - தற்போது அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.