முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Monday, November 19, 2018

தொன்மச் சோழர்கள்



                                தொன்மச் சோழர்கள்

சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு. சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு, பாண்டிமண்டலம், வையைநாடு என பெயர்களுண்டு. அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம், மலை நாடு, சேரன் நாடு என பெயர்களுண்டு. சோழர் நாடுகளின் ஊர் பெயர்கள் கோட்டை என்றும், பாண்டியர் நாடுகளின் ஊர் பெயர்கள் பட்டி என்றும், சேரன் நாடுகளின் ஊர் பெயர்கள் பாளையம் என்று முடிவடைவதையும் காணலாம். மேலும் சோழமண்டலம் தஞ்சை, கச்சி என்ற கூறையுடையது. பாண்டிமண்டலம் கொற்கை, கூடல் எனும் கூறையும், சேரமண்டலம் கொங்கு, கேரளம் எனும் கூறையும் உடையன.

சந்திர மரபினர் பெயர்கள்.
உசிதன், கவுரியன், கூடற்கோமான், கொற்கைவேந்தன், செழியன், தென்னவன், பஞ்சவன், பாண்டியன், மாறன், மீனவன், வழுதி, வையைத்துறைவன் என்பன.

அக்கினி மரபினர் பெயர்கள்.
உதியன், குடகன், குடக்கோன், கேரளன், கொங்கன், சேரலன், சேரலாதன், மலையமான், முத்தரையன், வஞ்சிவேந்தன், வானவரம்பன், வானவன், வில்லவன், பூலியன், பனந்தாரகன், பொறையன், கொல்லிவெற்பன், குட்டுவன் என்பன

சூரிய மரபினர் பெயர்கள். 
மனு, இக்குவாகு, நல்லுத்தரன், புறஞ்சயன், மாந்தாதா, நாகன், மறையன், இராயன், முசுகுந்தன், வாளமரன், விசலன், நன்னி, ஓரி, காரி, கண்டியன், அம்பன், கள்ளியன், சோழன், மறவசோழன், வில்லியன், நன்னி என்பன 

சூரிய மரபினர்களே பெரும்பான்மையும் சக்கரவர்த்திகளாக இருந்தனர் என்று சுந்தரபாண்டியன், திருக்களர், பத்தூர் முதலாய கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

மனுச்சோழன் (சக்ரவர்த்தி)
சூரிய குலத்தில் தோன்றி ஆரூர் எனும் தேவாரத் திருத்தலத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். நீதி,நேர்மை,நியாயம் தவறாது ஆட்சி செய்தவன். எண்ணிறந்த யாகங்களைச் செய்தவன். பசுவின் கன்றின் மேல் தேரைச் செலுத்திக் கொன்ற தன் மகன் இக்குவாகுவைத் தேர்க்காலிட்டு அரைத்துக் கொன்றவன். சூரிய குலத்தில் தோன்றியமையால் மால்,சூரியன் எனும் பட்டங்களும் மனுகுலம் என்னும் குலப்பெயரும் வழங்கலாயிற்று. (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது)

வேளிர்.
மனுச்குச் சக்ரவர்த்திக்குப் பின்னும் சோழன் என்னும் அரசனுக்கு முன்னும், மனு மரபில் தோன்றி பெருவேளூர் எனும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்ட வேள் என்னும் அரச மரபினர் வேளிர் எனப்பட்டனர்.

நாகர்
வேள் மரபில் தோன்றி நாகபட்டினம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்ட நாகன் என்னும் அரச மரபினர் நாகர் எனப்பட்டனர்.

செம்பியன்.
நாகர் பரம்பரையில் தோன்றி புகார்ப்பட்டினம் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன் முசுகுந்தன்.முசுகுந்த அரச மரபில் தோன்றி செம்பியபுரம் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன் சிபி சக்ரவர்த்தி, செம்பியன் என்ற பட்டம் பெற்றான்.
மழவன்.
செம்பியன் மரபில் தோன்றி மழவன்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன் மழவன் என்ற பட்டம் பெற்றான்.

வாணர்.
மழவன் மரபில் தோன்றி வாணாதரையன்பட்டினம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன் வாணன் என்னும் அரசன். இவன் பரம்பரையினர் வாணர் எனப்பட்டனர்.

சோழர் குலம்.
கள்ளர் குலம் உலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஏகாதிபதியாய் பல்லாயிரம் நகரங்களையும், எண்ணிறந்த கோயில்களையும் அளவற்ற ஆறுகளையும் கணக்கற்ற ஊர்களையும் உண்டுபண்ணி வாழையடி வாழை போல் ஆண்டு வந்த ஒரு பூர்வீக குடிகளென்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெங்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலிங்கத்துப்பரணி, பன்னிருதிருமுறை, திருமொழிப்பிரபந்தம் மூலம் அறிய முடிகிறது. ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் கள்ளர். இப் பட்டங்கள் அரசன்,தலைவன்,வீரம், நாடு, நகரம், ஆறு, ஊர், கோயில், குளம், ஏரி முதலியவற்றுடன் சம்பந்தபட்டவை என்பதனை நன்குணரலாம்

சோழ மரபினர்.
சோழ மரபினர் சூரிய குலத்தினர் என்பது சங்கத்துச் சான்றோர் கருத்தாகும். செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் இதையே அறிவிக்கின்றன. இவர்களுடைய கொடியும் இலச்சினையும் புலியுருவம் பொறிக்கப் பெற்றவையாகும். ஆத்தி மாலை சோழ குலத்தின் அடையாள மாலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. சோழ அரசர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய பேருபெற்ற திருவுடைய நகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், பழையறை நகர் என்பன. இவற்றுள் உறையூரும், காவிரிப்பூம்பட்டினமும் சங்ககாலச் சோழருக்கும், தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் பிற்காலச் சோழருக்கும் தலைநகரங்களாக விளங்கியவை. பழையறை நகர் சோழ அரசர்கள் பல்லவ அரசர்களுக்கு சிற்றரசராயிருந்த காலப்பகுதியில் வாழ்ந்த இடமாகும்.

சோழர்களின் கொடி புலிக்கொடி . சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம்
அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில்
கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி .

ஆத்தி
ஆத்தி ஒரு சிறிய மரம். சற்று குணக்கும் கோணலுமாக வளரும். இலைகள் இரண்டு சிற்றீலைகள் சேர்ந்த கூட்டிலைகள். 1 - 2 அங்குல நீளமிருக்கும்.இச்சிற்றிலைகள் நீளத்தில் பாதிக்குமேல் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும். நரம்புகள் கைவடிவமாக ஓடும். பூ சற்று ஒரு தளச்சமமானது. புறவிதழ்கள்5 ஒன்றாகக்கூடி மடல் போல இருக்கும். நுனியில் 5 பற்கள் இருக்கும். அகவிதழ்கள் 5 சற்றுச் சமமின்றியிருக்கும். வெளுப்பான மஞ்சள் நிறமுள்ளவை, தழுவு அடுக்குள்ளவை. விரைவில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. மேற்பக்கத்து இதழ் எல்லவற்றிற்கும் உள்ளே அமைந்திருக்கும்
கேசரங்கள் 10. சூலகத்திற்குச் சிறுகாம்பு உண்டு, பல சூல்கள் இருக்கும். கனி ஒரு சிம்பு. 6 - 12 அங்குல நீளமும் 3/4 - 1 அங்குல அகலமும் இருக்கும். மரம், பட்டை, வேர், இலை, பூ, கனி முதலியன மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை. பட்டை சொரசொரப்பாகவும் கருமை நிறமுடையதாகவும் நார் எடுத்து முரடாண பலம் வய்ந்த க்யிறு திரிப்பதற்கும் உதவும், மரம் பழுப்பு நிறமுடய கடினமான விறகாகும். ஆத்திக்கு ஆர் என்ற பெயரும் உண்டு. இது ஒரு வித மந்தாரையாகும். ஆங்கிலத்தில் பௌஹினியா ராசிமோசா என்ற பெயர் உண்டு.

சோழர் ஆட்சியின் வரைவிலக்கணம் என்ன?
நடுநிலை தவறாத ஆட்சி.
விழுப்புண்படாத நாளெல்லாம் வாழ்ந்தும் வீணான நாட்கள் என்ற படை மறவர்கள்
அறம் உரைக்கும் புலவர் பெருங்குடி மக்கள்
சான்றோர் நிறைந்த சமூகம்
அறநெறி பிறழாத குடிமக்கள்
நடுநின்ற நன்நெஞ்சு படைத்த வணிகர்கள்.


No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.