மநுநீதிச் சோழன்
மனு சக்ரவர்தி எனும் மனு நீதிச்சோழன்.
ஆரூர் என்னும் நகரத்தை யுண்டுபண்ணி இரரசதானியாகக் கொண்டவன்.பல யாகங்களை செய்து நீதி, நேர்மை, கடமை போன்ற நற்செயல்களுக்கு பெயர் பெற்றவன். பசுவின் கன்றின்மேல் தேரைச் செலுத்தி கொன்ற தன் மகனாகிய இக்குவகுவைத் தேர்க்காலில் வைத்து அரைத்துக் கொன்றவன். சூரியன் மரபில் வந்தமையால் மால், சூரியன் என்னும் பட்டங்களையும் சுமந்தவன். இவனது குலம் சூரியகுலம், மனுகுலம் என்றும் வழங்கலாயிற்று. இலங்கையின் வரலாறு பற்றி கூறும் மகாவம்சம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இலங்கை அரசனான அசேலனை சோழ மன்னன் எழ்ளாளன் (ஏழரரன்) என்பான் போரில் வென்று 45 வருடங்கள் ஆட்சி செய்ததாகவும் பின்னர் இலங்கை அரசன் துட்டகாமினியிடம் அரசை பறிகொடுத்ததாகவும் கூறுகிறது. மேலும் மகாவம்சம் மகனை தேர் ஏற்றி கொன்ற உத்தமன் சோழமன்னன் ஏழரரன் என்றும் பெளத்த துறவிகளிடம் பேரன்பு காட்டி வந்தான் என்றும் கூறுகிறது. இவன் ஆண்ட பகுதி இலங்கையின் வட பகுதி என்றும், துட்டகாமினிக்கும் எழ்ளாளனுக்கும் போர் நடந்த இடம் அநுராதபுரம் என்றும் எழ்ளாளன் போரில் இறந்த பின்னர் அவனுக்குரிய இறுதிக்கடன்களை செய்து அவன் இறந்த இடத்தில் நினைவுத் தூபி அமைத்து வழிபாடு நடை பெறச் செய்தான் என்ற பல தகவல்கள் மகாவம்சத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இச்செய்திகள் சிலப்பதிகாரம், மணிமேகளை போன்ற பழைய நூல்களில் இடம்பெறவில்லை. மகனை தேர் ஏற்றி கொன்ற ஒரே அரசன் மனுச்சோழன் என்பதால் மனுச்சோழனின் மறு பெயர் ஏழாரன் என்று இருக்கக்கூடும்.
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.