இந்திய ஆறுகள்
தீபகற்ப இந்திய ஆறுகள்
i.
தீபகற்ப இந்தியாவின் ஆறுகள் பெரும்பாலானவை உற்பத்தியாகும் இடம் மேற்குத் தொடர்ச்சி மலை.
ii.
மேற்குத்தொடர்ச்சி மலைகள் தென்மேற்குப் பருவ காற்றினால் கனமழையை பெறுகின்றன.
iii.
ஆறுகள் உருவாகும் இடத்தில் மழைப்பொழிவு இருப்பதினால் மழைக்காலங்களில் மட்டும் நீர் பாய்ந்து, மழையற்ற காலங்களில் வறண்டு போகின்றன. எனவே, இவை வற்றும் ஆறுகள் எனப்படுகின்றன.
iv.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும். ஆறுகள் பீடபூமி பகுதியிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கின்றன.
v.
கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் முக்கியமானவை மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி என்பவையாகும்.
vi.
காவேரி ஆறு உற்பத்தி ஆகும் இடம் கர்நாடகாவிலுள்ள குடகுமலை, திருச்சி, தஞ்சை, மாவட்டங்களில் டெல்டாக்களையும் சுழி முகங்களையும் உருவாக்குகின்றது.
vii.
ஆந்திராவை வளப்படத்தும் ஆறு கோதாவரி, கிருஷ்ணா.
viii.
தீபகற்ப இந்திய ஆறுகளில் மிக நீளமானது கோதாவரி.
ix.
நர்மதை, தபதி ஆறுகள் தக்காணப் பீடபூமியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள உயர்நிலங்களில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது.
புறதீபகற்ப இந்திய ஆறுகள்:
1.
புற தீபகற்ப இந்திய ஆறுகளில் பெரும்பான்மையானவை இமயமலையில் தோன்றுகின்றன.
2.
இமயமலை உயரமாக இருப்பதால் பனி ஆறுகள் உருவாகின்றன.
3.
புற தீபகற்ப ஆறுகள் இப்பனி ஆறுகளிலிருந்தும், மழைக் காலத்தில் பருவ மழையினாலும் நீரைப் பெறுகின்றன. எனவே இவை ஆண்டு முழுவதும் நீரோட்டத்துடன் காணப்படுகின்றன. எனவே இவை வற்றாத ஆறுகள் எனப்படுகின்றன.
4.
புற தீபகற்ப ஆறுகளில் முக்கியமானது கங்கை ஆறு.
5.
அலக்நந்தா, பாகிரதி என்ற இரு ஆறுகள் தேவபிரயாக் என்னுமிடத்தில் ஒன்று சேர்ந்து கங்கை நதியை உண்டாக்குகிறது.
6.
இவ்வாறு இமயமலைகளின் ஹரித்துவார் என்ற இடத்தில் சமவெளியை அடைகிறது கங்கை நதி.
7.
(அலக்நந்தா, பாகிரதி, தேவபிரயாக் - ஹரித்துவார்)
8.
கங்கையின் துணை ஆறுகள்
o யமுனை
o தாமோதர்
o கோசி
9.
கங்கை டெல்டாவின் பெரும்பகுதி உள்ள இடம் – வங்காளதேசம்.
10.
கங்காவின் கிளை நதிகளில் ஒன்றான ஹீக்ளி மட்டும் இந்தியாவில் பாய்கிறது. இந்தியாவிலேயே மிக அதிக அளவு உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நடைபெறுவது ஹீக்ளி ஆற்றில்.
11.
கொல்கத்தா துறைமுகத்தைக் கடலுடன் வங்காள விரிகுடாவுடன் இணைக்கும் ஆறு ஹீக்ளி
12.
சிந்துவின் கிளை நதியான சட்லஜ் மட்டுமே இந்தியாவின் வடமேற்கில் பாய்கின்றது.
13.
ஆசியாவிலேயே மிகப்பெரிய அணையான பக்ராநங்கல் கட்டப்பட்டுள்ள ஆறு சட்லெஜ் (இவ்வணை மூலம் பஞ்சாப் பயன்பெறுகிறது.)
14.
பிரம்மபுத்திரா நதி இமயமலையின் வடகிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் பாய்கின்றது.
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.